IMA sacm : தங்க நகைக்கடை நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி.. தொடரும் மோசடிகள்.. மக்களே எச்சரிக்கை!

பெங்களூரு : பெங்களூருவைச் சேர்ந்த ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி 2,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மோசடி மன்னன் மன்சூர் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருரில் உள்ள ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி வந்தவர் முஹம்மது மன்சூர் கான். இவர் கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளார்.

இந்த நிலையில் இவரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினார்கள். இப்படி சுமார் 2000 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த மன்சூர் கான் பின்னர் துபாய்க்கு தப்பியோடி விட்டார்.

நான்காவனது மனைவியுடன் துபாயில் இருந்தார்?

நான்காவனது மனைவியுடன் துபாயில் இருந்தார்?

மன்சூர் தனது குடும்ப உறுப்பினர்கள், நான்காவது மனைவி மற்றும் மைத்துனர் ஜூனைத்துடன் துபாயில் வசித்து வந்ததாக கூறப்பட்டது. மோசடி குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் துபாயில் பகுதியில், ஒரு இந்திய தொழிலதிபரின் பாதுகாப்பில் தங்கியிருந்தார். அதோடு மன்சூர் தனது வணிகத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஒரு துபாய் ஹோட்டலில் இரவு நேரங்களில் கூட்டத்திய முகவர் நிறுவனங்களுக்கு இது தெரிய வந்துள்ளது.

நடுத்தர மக்கள் தான் ஏமாற்றம்?

நடுத்தர மக்கள் தான் ஏமாற்றம்?

கடந்த ஜூன் 28ம் தேதியன்று 51 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ197 கோடிக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியிடமிருந்தும் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையா சொத்துகளையும், இதோடு குற்றம் சாட்டப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் 40,000க்கும் மேற்பட்ட அடித்தட்டு நடுத்தர மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் எஃப்.ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

மன்சூர் டெல்லியில் கைது..

மன்சூர் டெல்லியில் கைது..

கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வந்த நிலையில், துபாயில் ஒரு தனியார் மருத்துவமனையில் மன்சூர் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக லுக்அவுட் நோட்டீசை மத்திய அமலாக்க துறையினர் பிறப்பித்து இருந்தனர். துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்ட வந்த மன்சூர் கானை பொருளாதார அமலாக்க துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே சொத்துக்கள் முடக்கம்

ஏற்கனவே சொத்துக்கள் முடக்கம்

பெங்களூருவில் உள்ள மன்சூர் கானின் சொத்துக்களை கர்நாடக சிறப்பு புலனாய்வு போலீசார் முடக்கி வைத்து உள்ளனர். மன்சூர்கானிடம் விசாரணை நடத்திய பிறகு அவரது சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மன்சூர் கான் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று அமலாக்கத்துறை சிறப்பு நீதி மன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூலை 23-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாராம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+