அம்பானி போடும் மாஸ்டர் பிளான்.. அமேசான் உடன் கூட்டணி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொட்டது எல்லாம் வெற்றி என்பது முகேஷ் அம்பானியின் பார்மூலா. இவரைப் போலவே அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார், அவர் தான் ஜெப் பீசோஸ். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தையும், கிளவுட் சேவை தளத்தையும் வைத்திருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் தந் இந்தப் பீசோஸ்.

 

இப்படி இவர்களைத் தனித்தனியா பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும் நிலையில், இருவரும் கூட்டணி சேர்ந்தால்.. சொல்லவா வேண்டும். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடக்க உள்ளது.

இலக்கு

இலக்கு

இந்தியாவில் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகம் செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல், இதன் தலைவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்க வேண்டும் என்பது தான் அடுத்த இலக்கு.

மறுமுனையில் இந்தியாவில் மகிப்பெரிய அளவில் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவது அமேசான். இதன் தலைவர் ஜெப் பீசோஸ் அவர்களுக்கு ஆப்லைன் வர்த்தகம், ஆதாவது நாடு முழுவதும் நேரடியாகக் கடைகளின் மூலம் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது தான்.

கூட்டணி

கூட்டணி

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் சுமார் 26 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்குவதற்காக முகேஷ் அம்பானியும், ஜெப் பீசோஸ் அவர்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மை என்றாலும் அது நடைமுறைக்கு வருமா என்பது உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

அலிபாபா
 

அலிபாபா

இதற்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் தனது பங்குகளைச் சீனா அலிபாபா உடன் விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகத்தை அதிக மதிப்பீடு செய்திருந்த காரணத்தில் அலிபாபா இந்தப் பேச்சுவார்த்தையில் கடைசிக்கட்டத்தில் விலகியது.

தற்போது அமேசான் விலை நிலையைத் தெரிந்துகொண்டு வந்திருப்பதால் டீல் முடிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

இதேபோல் அமேசான் நிறுவனமும் சில மாதங்களுக்கு முன்பு பிக் பஜார்-இன் தாய் நிறுவனமான பியூச்சர் குரூப் உடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.

இப்படி அமேசான் இந்தியாவில் brick-and-mortar பிரிவில் குதிக்க வேண்டும் எனத் தீவிரமாக உள்ளது.

வால்மார்ட்

வால்மார்ட்

அமேசான்-இன் இந்த முயற்சிகள் வெற்றிபெற்றால் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என 40 பில்லியன் டாலர் என்னும் மாபெரும் தொகை கொடுத்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கிய வால்மார்ட்-க்கு மிகப்பெரிய போட்டியாக அமையும்.

ஆப்லைன் வர்த்தகத்தில் இருக்கும் வால்மார்ட் ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட்-ஐ வாங்கி இந்தியாவில் தனது இடத்தை வலிமையாக்கி கொண்டது. தற்போது அமேசான் இதே முயற்சியைச் செய்கிறது.

பணம்

பணம்

அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தத் தருணத்தில் ஜெப் பீசோஸ் ஜூலை 29 முதல் 31 வரையிலான நாட்கலில் சுமார் 9 லட்ச அமேசான் பங்குகளை விற்பனை செய்து சுமார் 1.8 பில்லியன் டாலர் பணத்தைப் பெற்றுள்ளார். இதை இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் தனது 26 சதவீத பங்குகளை விற்றால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது 2.88 லட்சம் கோடி ரூபாய் கடனில் ஒரு பகுதியை அடைக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon may tieup with mukesh Ambani's Reliance Retail

Amazon is in exploratory talks with Reliance Retail to acquire up to 26% in the country’s largest brick-andmortar retailer, two senior industry executives said. However, they made it clear that there is no certainty that the initial discussions will result in any deal.
Story first published: Friday, August 2, 2019, 8:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X