டெல்லி : கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் 1.02 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியுள்ளதாம். இது முந்தைய மாதத்தினை விட சற்றே அதிகம் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே முந்தைய ஆண்டு 96,483 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நடப்பு ஆண்டில் ஜூலை மாதத்தில் கிடைத்துள்ள இந்த வசூலானது, கடந்த ஆண்டு ஜூலை மாத வசூலை விட 5.8 சதவிகிதம் அதிகமாகும்.

நடப்பு ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) முதன் முறையாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குறைவாக வசூல் ஆனது கடந்த ஜூன் மாதத்தில் தான் என்றும், இது 99,939 கோடி ரூபாயாக வசூலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய ஜிஎஸ்.டி வசூல் 17,912 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்.டி 25,008 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 50,612 கோடி ரூபாயாகவும் (இறக்குமதியின் மூலம் வசூலிக்கப்பட்ட 24,246 கோடி ரூபாயும் சேர்த்து) ஒர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் வசூல் 8,551 கோடி ரூபாயாக (ரூ.797 கோடி இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட வருவாய் உட்பட) வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையில் தாக்கல் செய்யப்பட்ட GSTR 3B தாக்கல் செய்யப்பட்ட கணக்கு 75.79 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் முதல் மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடாக, மாநிலங்களுக்கு 17,789 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜூலை மாதங்களில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 4,16,176 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது என்றும், இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,89,568 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி வரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஜி.எஸ்.டி மறைமுக வரிகளில் பெரும்பாலானவற்றைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications