மும்பை : இன்று காலை இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடன் தொடங்கினாலும் முடிவில் சரிவையே கண்டுள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 418 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 36,699 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 134 புள்ளிகள் சரிந்து 10,862 ஆக முடிவடைந்தது.

இதற்கு முக்கிய காரணம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதே என்றும் கூறப்பட்டது. குறிப்பாக தற்போது சுமார் 1.31 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 70.49 ரூபாயாக உள்ளது.
இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் நிலவி வந்த பதற்றமான சூழலில், அங்கு திடீரென அங்கு பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள். அந்த மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற பயணிகள், அமர்நாத் சென்ற பக்தர்கள் போன்றவர்கள் அவசரமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
மேலும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அங்கு என்ன தான் நடக்கிறது எனத் தெரியாமல் அம்மாநில அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குழம்பியிருந்த நிலையில், இன்று இவை அனைத்துக்கும், ஒரு விடையை கொடுத்துள்ளது மத்திய அரசு.
இன்று காலை மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததோடு, மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதுவும் ஒரு காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிய காரணமாக இருந்தது.
மேலும் சர்வதேச அளவில் முதல் இரண்டு பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் ஆரம்பிக்கும் நிலை நிலவி வருவதையடுத்து, அமெரிக்கா மீண்டும் சீனாவின் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் மிக பதற்றமான நிலையே காணப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சியுடன் காணப்பட்டன.
அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணங்களால், இந்திய ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் சந்தைகள் மேலும் சரிய இதுவும் காரணமாக அமைந்தது.
இதில் நிஃப்டி குறியீட்டில் டி.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ டாப் கெய்னராக இருந்தது. இதுவே யெஸ் பேங்க், யுபிஎல், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் உள்ளிட்ட டாப் லூசர்களாக இருந்தன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் பார்தி ஏர்டெல், டி.சிஎஸ், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி டாப் கெயினராகவும், இதுவே யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், கோடாக் மகேந்திரா, டாப் லூசர்களாக காணப்பட்டன.


Click it and Unblock the Notifications