புதிய பிஸ்னஸ்.. முகேஷ் அம்பானி அதிரடி முடிவு..!

முகேஷ் அம்பானி தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை ஓரம்கட்டிவிட்டார் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்து ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முடிவுடன் அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டணி வைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் தற்போது மூன்றாகப் பிரிந்துள்ளது, கச்சா எண்ணெய் மற்றும் அதன் சார்ந்த வர்த்தகம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல். இதில் ரிலையன்ஸ் ரீடைல் தான் முகேஷ் அம்பானிக்கு அடுத்த மாபெரும் இலக்காக உள்ளது. ரீடைல் வர்த்தகத்தில் சோப்பு, சீப்பு முதல் தங்கம், வைர நகைகள் வரையில் முகேஷ் அம்பானி விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் இதனை மேலும் விரிவாக்கம் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார்.

 

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் ஆடம்பர நகை விற்பனை நிறுவனமான Tiffany & Co உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி வைத்து இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு இது மகுடம் ஆகவே பார்க்கப்படுகிறது.

மும்பை மற்றும் டெல்லி

மும்பை மற்றும் டெல்லி

இக்கூட்டணி 2019ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2020இல் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கடையைத் திறக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் திருமண மோதிரங்களுக்கு மிகவும் பிரபலமானவை, அதேபோல் ராபின் நீல முட்டை பெட்டியும் இந்நிறுவனத்தின் அடையாளமாக விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் வருகை பல முன்னணி தங்க, வைர வியாபாரிகளின் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றால் மிகையில்லை, Tiffany & Co ஒரு பக்கம் பிராண்டட் மறுபுறம் மிகவும் பிரபலமான டிசைன்களைக் கொண்டுள்ளது. இதனால் ஆடம்பர நகை பிரியர்கள் நிச்சயம் Tiffany & Co கடைக்குத் தான் செல்வார்கள்.

 

பொம்பை வியாபாரம்

பொம்பை வியாபாரம்

சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டின் முன்னணி பொம்பை விற்பனை நிறுவனமான Hamleys-ஐ முழுமையாக வாங்கி இந்தியாவிற்குக் கொண்டு வருவதாக அறிவித்தாக அறிவித்தார். இதற்கிடையில் Tiffany & Co உடன் கூட்டணி வைத்து தனது ரீடைல் வர்த்தகத்தைப் பல கோணங்களில் வளர்க்கத் திட்டம் தீட்டி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+