Gold Price: ராக்கெட் வேகத்தில் விலை ஏறும் தங்கம்..! 10 கிராமுக்கு 39,400 ரூபாயா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை, தமிழ் நாடு: கடந்த இரண்டு வார காலமாக தங்கத்தின் விலை (Gold Price) சகட்டு மேனிக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த 2019-ம் வருட தொடக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக 31,500 ரூபாய்க்கு தான் வர்த்தகமாகி வந்தது.

 

ஆனால் தற்போது அதே 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) சுமாராக 38,500 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்துக்கு வருவோம்.

மேலே சொன்னது தங்க ஃப்யூச்சர்ஸ் வர்த்தகம். ஆபரணத் தங்கத்தில் 22 கேரட் மற்றும் 24 கேரட் என இரண்டு ரக தங்கங்கள் இருக்கின்றன. இரண்டு ரக தங்க விலை (Gold Price) நிலவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அம்பானியின் அடுத்த திட்டம் தான் என்ன.. 20% பங்குகளை சவுதி அராம்கோவிற்கு விற்ற முகேஷ் அம்பானி! அம்பானியின் அடுத்த திட்டம் தான் என்ன.. 20% பங்குகளை சவுதி அராம்கோவிற்கு விற்ற முகேஷ் அம்பானி!

தங்க விலை நிலவரம்

தங்க விலை நிலவரம்

22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Price) கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 33,150 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 36,030 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Price) கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 36,160 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,400 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன.

22 கேரட் 19% அதிகம்

22 கேரட் 19% அதிகம்

2019-ம் ஆண்டு உண்மையாகவே தங்கத்துக்கான ஆண்டு தான் போல. சுமாராக கடந்த 2013 - 14 ஆண்டுகளில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காணாத விலை ஏற்றத்தை, இந்த 2019-ம் ஆண்டின் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையான 7 மாத காலங்களிலேயே நல்ல விலை ஏற்றம் கண்டிருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று 30,170 ரூபாயாக இருந்தது.

ஆபரணத் தங்கம்
 

ஆபரணத் தங்கம்

இப்போது அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) 36,030 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. ஆக சுமார் 19 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையே இந்த ஏற்றம் கண்டிருக்கிறது என்றால்... 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன ஏற்றம் கண்டிருக்கும்..? வாருங்கள் அதையும் கணக்கு போட்டு பார்த்துவிடுவோம்.

சொக்கத் தங்கம்

சொக்கத் தங்கம்

24 கேரட் சொக்கத் தங்கம் 10 கிராமின் விலை கடந்த ஜனவரி 01, 2019 அன்று 31,650 ரூபாயாக இருந்தது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,400 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகின்றன. ஆக சொக்கத் தங்கத்தின் விலை சுமார் 24 சதவிகிதம் இந்த ஜனவரி 2019 தொடங்கி இன்று வரை விலை ஏற்றம் கண்டிருக்கின்றன. வெறும் ஏழு மத காலத்தில் 24 சதவிகித விலை ஏற்றம் என்பதை இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

விலை ஏற்றப் போக்கு

விலை ஏற்றப் போக்கு

கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவில்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.

இரண்டாம் ஏற்றம்

இரண்டாம் ஏற்றம்

ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று ஆகஸ்ட் 13, 2019 வரை 39,400 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம் அடுத்த ஒன்பது மாதங்களில் ஒரு recession-ல் சிக்கலாம் எனச் சொல்கிறார்கள். அப்படி உலக பொருளாதாரம் ரெசசனில் சிக்கினால் தங்கத்தின் விலை (Gold Price) இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் தங்க அனலிஸ்டுகள். ஆக இந்த 2019-ல் தங்கச்சி கல்யாணம், மகள் திருமணத்துக்கு நகை வாங்குபவர்கள் இப்போது தங்கம் விற்கும் விலைக்கே வாங்கிப் போட யோசியுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Price increased 20 percent in this year

Gold Price increased 20 percent in this year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X