700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..?

காஷ்மீர் பிரச்சனையை நாடு முழுவதும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அனைவரும் ஜியோ அறிவித்துள்ள மலிவு விலை பிராண்ட்பேன்ட் இணைப்பு பற்றித் தான் பேசி வருகிறார்கள். அதிவேக சேவை, பலதரப்பட்ட சேவை, மலிவு விலை இந்தக் காம்பிநேஷன் போதாத என்ன வெற்றி பெற.

இது ஒருபக்கம் இருக்க, திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் 700 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பை அடையப் பயணிக்கிறது என்று கூறினார். இது என்ன வர்த்தகம்..? முகேஷ் அம்பானி எதை பற்றிப் பேசுகிறார்..?

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே தெரிவித்தது போல் முகேஷ் அம்பானி தனது எண்ணெய் வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தால் அதைத் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டணியின் வாயிலாக வளர்க்க திட்டமிட்டுள்ளார்.

அதேவேளையில் தனது மொத்த கவனத்தையும் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மேல் திருப்பியுள்ளார்.

 

வருடாந்திர கூட்டம்

வருடாந்திர கூட்டம்


திங்கட்கிழமை நடத்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி இந்தியா முழுவதிலும் இருக்கும் 3 கோடி மளிகை கடைகளை மக்களோடும், உற்பத்தி நிறுவனங்களோடு நேரடியாக இணைக்கும் ஆப்லைன்-டூ-ஆன்லைன் வர்த்தகத் தளத்தை உருவாக்கிய 700 பில்லியன் டாலர் சந்தையில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.

இதன் நியூ காமர்ஸ் என்றும் முகேஷ் அம்பான் பெயர் வைத்துள்ளார்.

 

வகைப்படுத்தப்படாத துறை

வகைப்படுத்தப்படாத துறை

இந்திய ரீடைல் சந்தையில் சுமார் 90 சதவீதம் வர்த்தகங்கள் வகைப்படுத்தப்படாத அதாவது unorganized சந்தையின் கீழ் வருகிறது. இப்பிரிவின் கீழ் சுமார் 3 கோடி அங்காடிகள் இயங்குகிறது.

இக்கடைகள் மூலம் சுமார் 20 கோடி மக்கள் வர்த்தகம் செய்து வருகின்ற மாபெரும் துறை இது. சொல்லப்போனால் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னாலும் மிகையாகாது என முகேஷ் அம்பானி வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 

அம்பானி திட்டம்

அம்பானி திட்டம்


இந்நிலையில் இந்த 3 கோடி கடைகளை ஒன்றாக இணைத்து end-to-end டிஜிட்டல் மற்றும் நேரடி விநியோக சேவை அளிக்கத் திட்டமிட்டு வருகிறார் முகேஷ் அம்பானி.

இதற்காகத் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு பிளாக்செயின், இண்டர்நெட் ஆப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது.

 

இலக்கு

இலக்கு

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் குமரி முதல் காஷ்மீர் வரையில் இருக்கும் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், சிறு விற்பனையாளர்கள், நுகர்வோர் என அனைத்து பிரிவினரையும் இணைப்பது தான்.

இத்திட்டம் தற்போது சோதனையில் இருப்பதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

 

700 பில்லியன் டாலர்

700 பில்லியன் டாலர்

இத்திட்டம் வருடம் நடைமுறைக்கு வந்தால் முகேஷ் அம்பானி வருடம் 700 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டுள்ள இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய பங்கீட்டை ரிலையன்ஸ் குழுமம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+