ஊர் முழுக்க நம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா ஃபைபரைப் பற்றித் தான் பேச்சு. அதிலும் சினிமா ஆர்வலர்களுக்கு அந்த முதல் நாள் முதல் ஷோ தான் முதல் விஷயமாக இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகா ஃபைபர் ப்ரீமியம் சேவை மூலம், சினிமா வெளியாகும் முதல் நாளே, வீட்டில் இருந்த படி சினிமா காணலாம் என்கிற செய்தி நாம் அறிந்ததே.
அந்த செய்தியைக் கேள்விப்பட்டு இந்தியாவின் முக்கியமான இரண்டு மல்டி ப்ளக்ஸ் நிறுவனங்களான PVR மற்றும் Inox தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
PVR தரப்பு
"கடந்த பல ஆண்டுகளாக, சினிமாவைத் தயாரித்தவர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு, சினிமாக்களை திரை அரங்குகளில் ரிலீஸ் செய்வது லாபகரமன மாடலாக இருந்திருக்கிறது. இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி, சினிமாக்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், இந்த சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மதித்து வருகிறார்கள். அதோடு திரை அரங்குகளில் ஒரு சினிமாவை ரிலீஸ் செய்வதற்கும், ஆன்லைன், டிவிடி, டிடிஹெச், டிவி போன்ற மற்ற முறைகளில் சினிமாவை ரிலீஸ் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியையும் வைத்திருக்கிறார்கள்" எனச் சொல்கிறது பிவிஆர் சினிமாஸ்.
Inox தரப்பு
"ஒரு சினிமாவின் தயாரிப்பாளர் தான் அதன் உரிமையாளர். அவர் விருப்பப்பட்டால், எந்த முறையில் வேண்டுமானாலும் தன் சினிமாவை ரிலீஸ் செய்யும் உரிமை, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் (Distributor) மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்களுக்கு மத்தியில் ஒரு பிரத்யேக திரை அரங்கு ஒளிபரப்பு காலமாக (Theatrical Window) 8 வார காலங்கள் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." எனச் சொல்லி இருக்கிறார்கள் ஐனாக்ஸ் நிறுவனத்தினர்கள்.
உலக நடப்பு
மேலும் "இந்த திரை அரங்கு ஒளிபரப்பு கால மாடலைத் (Theatrical Window Model) தான் உலகம் முழுக்க பின் பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அந்தப் படத்தை நம்பி பணம் போட்டவர்களுக்கு, மீண்டும் பணம் எடுக்க முடிகிறது. இதே மாடலைத் தான் இப்போது இந்தியாவிலும் பின் பற்றி வருகிறோம்" எனச் சொல்லி இருக்கிறது ஐனாக்ஸ் லெசர் லிமிடெட் நிறுவனம் (Inox Leisure Ltd).
ஃபிக்கி அறிக்கை
இந்திய மீடியா மற்றும் பொழுது போக்கு துறை குறித்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் கூட்டமைப்பு (FICCI) வெளியிட்டு இருக்கும் மார்ச் 2019 அறிக்கை படி, 2018-ம் ஆண்டில் ஒட்டு மொத்த இந்திய சினிமா ரிலீஸ் வருமானம் 17,450 கோடி ரூபாயாம். அதில் சுமாராக 75 சதவிகித வருமானம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு திரை அரங்குகளில் திரையிட்டு வந்த பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் தான் எனச் சொல்கிறது. அதோடு கடந்த 2018-ல் சினிமா துறை அமெரிக்கா மற்றும் கானடாவில் 11.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறார்களாம். சீனாவில் 7.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறார்களாம்.
பெரிய நட்டம் வரும்
ஆக திரை அரங்குகளில் சினிமா ரிலீஸ் ஆவதற்கு மாறாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் ஜிகா ஃபைபர் வழியாக முதல் நாளிலேயே சினிமாவை டிவியில் ஒளிபரப்பு செய்தால், உள் நாட்டு திரை அரங்குகளில் வெளியிட்டு கிடைக்கும் மொத்த உள் நாட்டு பாக்ஸ் ஆஃபீஸ் (Box Office) வருமானத்தில் சுமார் 60 - 70 சதவிகித சினிமா வருமானம் அடிபடும் என தன் வருத்தத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள் ஐனாக்ஸ் லெஷர் நிறுவனத்தினர்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications