கூவி கூவி விற்றாலும் வாங்க ஆளில்லை.. மோசமான நிலையில் ரியல் எஸ்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எந்தத் துறையைப் பார்த்தாலும் தொய்வு, சரிவு, பிரச்சனை எனத் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில், தற்போது இந்த வரிசையில் ரியல் எஸ்டேட் துறையும் சேர்ந்துள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற தீட்டத்தின் கீழ் மலிவான விலை வீட்டிற்குச் சலுகை வழங்கியது.

 

இதைத்தொடர்ந்து பல ரியல் எஸ்டேட் நிறுவனமான மலிவான வீட்டுகளைக் கட்டி குவித்தது. ஆரம்பத்தில் மளமளவென விற்பனை ஆன மலிவு விலை வீடுகள் தற்போது பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது.

மவுசு குறைந்தது

மவுசு குறைந்தது

மாத வருமான கிடைக்க வர்த்தக வளர்ச்சி மிகவும். ஆனால் நாட்டின் வர்த்தக வளர்ச்சி தற்போது மோசமான சரிவு பாதையில் உள்ளது, இதோடு புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் இருக்கும் பிரச்சனை மக்களை வாட்டி வதைக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மலிவு விலை வீட்டுக்கான மவுசு குறைந்துவிட்டது.

4 லட்ச வீடுகள்

4 லட்ச வீடுகள்

இதன் எதிரொலியாகத் தற்போது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.12 லட்ச மலிவு விலை அப்பார்ட்மென்ட் வீடுகள் விற்பனை ஆகாமல் கிடக்கிறது. இந்த வீடுகளின் அதிகப்படியான விலையே 45 லட்சம் தான்.

இதைச் சரி செய்ய மத்திய அரசு தற்போது வீட்டு கடனுக்காகச் செலுத்தும் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவித்துள்ளது. வீட்டு கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகைக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் இருந்த வரிச் சலுகை தற்போது 3.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

9 நகரங்கள்
 

9 நகரங்கள்

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தியாவின் முன்னணி நகரங்களான குர்காரம், நொய்டா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களில் சுமார் 7.98 லட்ச வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது.

இதில் 4.12 லட்ச வீடுகள் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மலிவு விலை வீடுகள்.

வேகமான விற்பனை

வேகமான விற்பனை

மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் இத்துறையில் விற்பனை ஆகாமல் கிடக்கும் 8 லட்ச வீடுகள் இனி வரும் வாரங்களில் வேகமாக விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முன்வந்து புதிய வீடுகளை வாங்க முன்வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் துறையின் கதையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad state of real estate: 4 lakh unsold flats in affordable segment

Real estate developers are sitting on 4.12 lakh unsold apartments priced up to Rs 45 lakh, despite improvement in demand for affordable homes from end-users.
Story first published: Monday, August 19, 2019, 9:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X