டெல்லி : இந்தியா மிக மோசமான பொருளாதார நிலைமையில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், தற்போது நடந்து கொண்டிருக்கும், பத்திரிக்கையாளர் கூட்டத்தில், நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த கூட்டத்தில் இந்தியா பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை, மாறாக உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியவர், ஜி.எஸ்.டியில் முக்கிய மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜி. எஸ்.டியில் உள்ள குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதோடு ஜி,.எஸ்.டியில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், அதிகப்படியான ஜி.எஸ்.டி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜி.எஸ்.டி விகிதங்களில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார். இது தவிர ஜி.எஸ்.டி ரீபண்டி குறித்தான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காணப்படும் என்றும், அதிலும் குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி ரீபண்ட் 30 நாட்களுக்குள் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுவே இனி புதியாக ஜி.எஸ்.டி பதிவு செய்யப்படும சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, ரீபண்ட் 60 நாட்களில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி இந்தியாவில் வரி கட்டமைப்பை தரப்படுத்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதியமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே தொடர்ந்து அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி குறித்தான என்னென்ன பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர் மற்றும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது குறித்தான ஆலோசனைகளையும் துறை சார்ந்த நபர்களிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர ஜி.எஸ்.டி துறையை மேம்படுத்த அதிரடி பல நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு ஒவ்வொரு மாநில அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரிநு கொள்ளவதோடு, அது சார்ந்த நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறி வருகிறாராம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications