மும்பை : இந்திய பங்கு சந்தைகளின் தொடர் சரிவுக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு.

இந்த நிலையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியதை அடுத்து, வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் குறைந்து, 72.03 ரூபாயாக இருந்தது. எனினும் தற்போது (10 மணியளவில்) 71.99 ரூபாயாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
எனினும் இதே நேரப்படி இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சியுடனே காணப்படுகின்றன, குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 121 புள்ளிகள் வீழ்ச்சிக் கண்டு 36,351 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்து, 10,711 ஆக வர்த்தகமாகியும் வருகிறது.
சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா சீனா பிரச்சனையால், நிலவி வரும் மந்த நிலையால், குறிப்பிட்ட 17 கரன்சிகளில், 16 கரன்சிகள் வீழ்ச்சியுடனே காணப்பட்டதாகவும், மாறாக ஜப்பானின் யென் மதிப்பு மட்டும் ஏற்றத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இன்றே அதுவும் பொய்யாகி விட்ட நிலையில், ஜப்பானில் யென் மதிப்பும் படு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் சீனாவின் யுவான் மதிப்பும் 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கூறிய படி, 16 கரன்சிகளில் 12 கரன்சிகள், இந்திய ரூபாயை சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிஃப்டி இன்டெக்ஸில் உள்ள இந்தியா புல்ஸ், யெஸ் பேங்க், வேதாந்தா, ஜூ எண்டர்டெயின்மென்ட், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதுவே இந்தஸ்இந்த் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடாக் மகேந்திரா பேங்க், சிப்லா, ஐ.டி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள யெஸ் பேங்க், வேதாந்தா, டி.சி.எஸ், ஹெச்.சி.எல் டெக், ஹூரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்தங்க் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடாக் மஹிந்திரா, ஐ.டி.சி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications