முகேஷ் அம்பானியின் தீபாவளி திட்டம்.. சர வெடியாக காத்திருக்கும் சலுகைகள்.. இனி யாரை ஓரங்கட்டபோறாரோ?

உலக அளவில் பில்லியனர்களில் ஒருவாரான முகேஷ் அம்பானி, தற்போது தீபாவளியை குறி புதிய வணிகத்தை திட்டமிட்டுள்ளதாகவும், பல சலுகைகளை வழங்க உள்ளதாகவும் தொழில்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம். இப்ப அமைதியா இருப்போமா? அதுவும் பக்காவா பிளான் பண்ணி சிங்கம் களத்தில் இறங்குது, என்ன பன்ன போவுதோ?என்றும் பலரின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது அம்பானியின் திட்டம்.

எந்த தொழில் எடுத்தாலும், அதில் தனித்து நின்று, வெற்றி பெறுவதோடு, போட்டியாளர்களை ஓரம் கட்டுவதே இவரின் தனித்துவம்.

O2O பற்றி 2 ஆண்டுகளாக திட்டம்

O2O பற்றி 2 ஆண்டுகளாக திட்டம்

அந்த வகையில் இந்த புதிய வர்த்தகம் என்ன? என்ன சலுகை, என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறீர்கள் அல்லவா? முன்னரே சில்லறை வர்த்தகத்தில் கல்லா கட்டி வரும் ரிலையன்ஸ், ஆன்லைன் ரீடெயில் வர்த்தகத்திலும் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட, ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின், ஆன்லைன் டு ஆப்லைன் வர்த்தகத்தில், வர்த்தகர்கள், சிறு வணிகர்கள், மற்றும் சிறு பிராண்டுகள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்டோரை, தொழில் நுட்பத்தின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக அதிரடியாக திட்டம் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தற்போதைய நிலை என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தற்போதைய நிலை என்ன?

இந்த நிறுவனம் தற்போது அண்டை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், ஹைபர் மார்கெட்டுகள், மொத்த விற்பனை, சிறப்பு மற்றும் ஆன்லைன் கடைகளையும் இயக்கி வருகிறது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், இரண்டு கட்டங்களாக தனது தொழிலை இயக்க திட்டமிட்டுள்ளது. ஒன்று தீபாவளியை குறிவைத்து ஒரு மென்மையான விற்பனை, அடுத்த அதிரடியாக டிசம்பர் முதல் ஜனவரி வரை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன்- சில்லறை வர்த்தகத்திலும் தீபாவளி தமாகா

ஆன்லைன்- சில்லறை வர்த்தகத்திலும் தீபாவளி தமாகா

தீபாவளி தமாகா என்ற இந்த திட்டத்தினை ஆன்லைன் வர்த்தகத்தில் ஆகட்டும், சில்லறை வர்த்தகத்திலாகட்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம். அதிலும் பல அதிரடியான பல சலுகைகளை நுகர்வோருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாம் ரிலையன்ஸ். இதில் தினசரி வீட்டு உபயோகப்பொருட்களான சோப்பு, ஷாம்பு மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களும் சலுகையில் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் கிரானா ஸ்டோர்

ரிலையன்ஸ் கிரானா ஸ்டோர்

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தனது பொருட்களை, நாட்டின் மூலை முடுக்கு வரை எடுத்து செல்ல கிரானா ஸ்டோர்களை உபயோக்கிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் தனது பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், 30 மில்லியன் அண்டை கடைகளை, இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, ஆகஸ்ட் 12ம் தேதி அன்று, இந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

டெக்ஸ்ட் மெசேஜ்ஜில் தான் தள்ளுபடி விவரம்

டெக்ஸ்ட் மெசேஜ்ஜில் தான் தள்ளுபடி விவரம்

மேலும் இந்த நிறுவனம் வழங்கவிருக்கும் சலுகைகள் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸ்ட் மேசேஜ் மூலமாக மட்டும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய விவரம் அளிக்க உள்ளதாகவும், இதன் மூலம் யார் எங்கு அதிகமாக பொருட்களை வாங்குகிறார்கள். அதிகளவு நுகர்வு எங்கு செய்யப்படுகிறது என்றும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றும் தொழில் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+