பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம் திரைப்பட கண்காட்சிகள், விநியோகம் மற்றும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1,214 சதவிகிதம் லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2009ம் ஆண்டில் 119.55 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று (27 ஆகஸ்ட் 2019) 1,574 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 2009ல் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் இன்று நல்ல லாபம் பெற்றிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
நிறுவனத்தின் வரலாறு என்ன?
கடந்த 1978ல் தேஜாஸ் தவான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் 1988ல் அஜய் பிஜ்லியின் தந்தையால் வாங்கப்பட்டது. இவர் டிரக்கிங் வர்த்தகம் செய்து வந்த நிலையில், 1990 முதல் பி.வி.ஆர் சினிமா என்ற தொழிலை ஆரம்பித்தார். சுமார் 1600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனம், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், 164 இடங்களில் இந்த நிறுவனம் தனது கிளைகளை கொண்டுள்ளது.
தற்போது என்ன விலை?
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பெரியதாக விலையேற்றம் காணவில்லை எனினும், கடந்த 2008ல் 62 ரூபாய் ஆகத் தான் இருந்திருக்கிறது. எனினும் கடந்த 2009லிருந்தே நல்ல ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த நிலையில் அப்போதிலிருந்தே சந்தை சராசரியாக ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 2009, ஆகஸ்ட் 25ம் தேதியன்று 119.55 ரூபாயாக இருந்த, இந்த பங்கின் விலை, இன்று (ஆகஸ்ட் 27, 2019), சரியாக 10 வருடத்தில், இந்த அளவுக்கு உயர்ந்து 1,574 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
10 வருடத்திற்கு முன்பு முதலீடு
இந்த பங்கில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு, சுமார் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பின், அது தற்போது 13 லட்சம் ரூபாயாக கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. கிட்டதட்ட 1,214 மடங்குக்கு மேல் லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் இதன் போட்டியாளர்களான ஐனாக்ஸ் லெயிஷர் கூட 383.44 சதவிகிதம் லாபம் மட்டுமே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனமே, மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உரிமையாளராகும்.
லாபத்தில் உள்ள பி.வி.ஆர்
கடந்த ஆண்டு 190.52 கோடி ரூபாய் நிகர லாபத்தை கொண்ட இந்த நிறுவனம், இதே கடந்த 2010ல் 9 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 3118.70 கோடி ரூபாயாக இருந்த இதன் வருவாய், கடந்த 2010ல் 341.33 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தவர்கள் நல்ல லாபம் பெற்றிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications