ஒரு பக்கம் கிடுகிடு உயர்வு.. கதறும் டிசைனர்கள்.. 10ல் 3பேர் வேலையிழப்பு.. தகிக்கும் நகை வியாபாரம்!

கோயமுத்தூர் : நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் மட்டும் அல்ல, தங்கம் சார்ந்த துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் பல ஆயிரம் பேர் வேலையை இழந்து தவிக்கும் நிலை நிலவி வருகிறது.

இது குறித்து கோயமுத்தூர் தங்க நகை வியாபாரிகள் மற்றும் வடிவமைப்பாளர்களிடம் பேசிய போது, அவர்கள் கூறியதாவது; தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி தங்கம் சார்ந்த தொழிலாளர்களையும், இந்த விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது.

விலை அதிகம் என்பதால் மக்கள் தங்கம் வாங்க முன்வராத‌தால், நகைக்கடைகள் பெரும்பாலான ஆர்டர்களை நிறுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான சிறு தங்க வியாபாரிகளும், தங்க நகை செய்பவர்கள் பலரும் வேலையின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர்.

தொடர் விலையேற்றம்

தொடர் விலையேற்றம்

நடப்பு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலையானது தொடர் ஏற்றம் கண்டு வருகிறது, 50 ரூபாய் விலை குறைகிறது என்றால், 100 ரூபாயாக ஏற்றம் கண்டு வருகிறது. அதிலும் கடந்த ஜனவரி 1, 2019 அன்று, 22 காரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 3,019 ரூபாயாக இருந்தது, ஆக ஒரு பவுன் தங்கத்தின் விலை 24,152 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்றோ (ஆகஸ்ட்,28, 2019) ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,690 ரூபாயாகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை 29,520 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதே இந்த மாதத்தில் கிட்டதட்ட 30,000 ரூபாய் வரை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு செலவு அதிகம்

வடிவமைப்பு செலவு அதிகம்

பொதுவாக நாம் தங்க நகை எடுக்க சென்றால் அதன் தனித்துவமான அழகை பார்த்து பார்த்து வாங்குவோம். முன்னர் எல்லாம் மக்கள் நகை வாங்கும் போது குறைந்த பட்சம் 5 பவுன் அல்லது அதற்கும் அதிகமாக தான் வாங்குவார்கள். அதுவும் பொதுவாக காசு மாலை, கோதுமை செயின் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க டிசைன்களையே விரும்புவார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் 2 பவுன் மூன்று பவுனில் தான் அதிகம் வாங்குகின்றனர், குறைந்த அளவுள்ள தங்கத்தில் அதிக ஆபரணங்களை செய்ய விரும்புகின்றனர். இதனால் வடிவமைப்பாளர்களுக்கு வேலைப்பளு அதிகம் என்றும் கூறுகிறார்கள். வேலைப்பளு அதிகம் என்றாலும் செய்கூலி குறைவாகத் தான் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

இன்றைய நகைகளில் வேலைப் பளு அதிகம்

இன்றைய நகைகளில் வேலைப் பளு அதிகம்

அந்த கால நகை வடிவமைப்புகளை போல், செய்யும் போது சேதாரம் குறைவாக இருக்கும், மேலும் மறுமதிப்பீடும் அதிகம் இருக்கும். ஏனெனில் அது போன்ற நகைகளில் தேய்மானம் என்பது குறைவு தான். ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினர் அதிகம் பொடிவைத்து செய்யப்படும் நகைகளையே விரும்புகின்றனர். இதில் சேதாரம் அதிகம். அதோடு, மறு விற்பனையின் போது குறைத்து தான் கேட்பார்கள். ஏனெனில் இதில் தேய்மானமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகிறார். தற்போது முன்பை விட குறைந்த அளவுள்ள நகையை வடிவமைக்கப்பட்டாலும், வேலைப்பளுவும் அதிகம் என்றும் கூறுகிறார்கள்.

நகை ஆர்டர்கள் குறைவு

நகை ஆர்டர்கள் குறைவு

பொதுவாக தீபாவளி ஆரம்பிக்கும் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தே எங்களது தொழில் களைகட்டத் தொடங்கி விடும். ஆனால் இந்தாண்டு இதுவரை அதுகுண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை, மாறாக சராசரியான ஆர்டர்களை விட 30 - 50 சதவிகிதம் வரை ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதனால் தங்க நகை பட்டறையில் வேலை செய்யும் பணியாளர்களும் பலர் வேலையிழந்துள்ளனர். முன்னர் 10 பேர் வேலை செய்த இடத்தில் 7 பேர் தான் வேலை செய்கிறோம். தேவைப்பட்டால் இதிலும் ஆள்குறைப்பு இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

முன்னரெல்லாம் வாரத்திற்கு 100 பவுன் விற்பனையாகிறது என்றால் தற்போது 50 - 70 பவுன் விற்பனை ஆவதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால் ஷோரூம்களிலும் கூட, சில இடங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் சில நகைகடைகள் காத்தோடிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது. அதிகளவிலான விலையேற்றத்தினால், நடுத்தர மக்கள் யாரும் அதிகம் வாங்க விரும்புவதில்லை, இதனால் நடுத்தர மக்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

நகை ஏற்றுமதியும் சரிவு

நகை ஏற்றுமதியும் சரிவு

கடந்த ஜூலை மாதத்தில் தங்க நகை ஆபரணம் மற்றும் நவரத்தினம் ஏற்றுமதி 7 சதவிகிம் குறைந்து 298 கோடி டாலராக குறைந்துள்ளது. எனினும் சர்வதேச அளவில் நவரத்தினங்கள் மற்றும் நகை பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு 29 சதவிகிதம் உள்ளது. இந்த வகையில் நகை உபயோகமும் சரி, உற்பத்தியும் சரி தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றும் கூறலாம். ஏற்கனவே உள்ளூர் பயன்பாடும் குறைந்துள்ள நிலையில், ஏற்றுமதியும் குறைந்துள்ளதால், பல ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இறக்குமதி வரி அதிகம்

இறக்குமதி வரி அதிகம்

மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியை அதிகரித்தது. இதனால் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. ஆக இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா சீனா பிரச்சனையால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் காரணமாக, தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யப்படுவதால், தங்கம் விலை இப்படி வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வருகிறது. ஆக மத்திய அரசு நிலைமை சீரடைய வரி விகிதத்தில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

தீபாவளிக்காவது விற்பனை அதிகரிக்குமா?

தீபாவளிக்காவது விற்பனை அதிகரிக்குமா?

இந்த பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் தீபாவளி சீசனிலாவது விற்பனை களைகட்டுமா என்பது தான். ஏனெனில் ஏற்கனவே பல சிறு வியாபாரிகளும், வடிவமைப்பாளர்களும் வேலையை இழந்துள்ள நிலையில், இனி இருக்கும், ஆட்களாவது மிச்சம் இருக்க வேண்டுமே என்ற கவலை நீடித்து வருவதாக கூறுகிறார்கள். தற்போது சிலர் மாற்று வேலை தேடி சென்று விட்டதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள தொழிலாளர்களும் விலை உயர்வு நீடித்தால் மாற்று வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர் என்றும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசுக்கு கோரிக்கை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த சிறு நகை கடை உரிமையாளர்கள், தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டால், நடுத்தர மக்கள் வாங்க முடியாத சூழ்நிலை அதிகரிக்கும் என்றும், இதனால் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

நகை சீட்டுகள் அதிகம்

நகை சீட்டுகள் அதிகம்

தொடர்ந்து விலையேற்றம் காணும் தங்க நகை விலையேற்றத்தினால், தற்போது தங்க நகை சீட்டுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏனெனில் ஒட்டுமொத்தமாக பணம் கொடுத்து வாங்க முடியாத, நடுத்தர மக்கள், இப்படியாவது தங்களது பெண் குழந்தைகளுக்கு சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதால், இந்த வகையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. எனினும் இதையும் சரியான நிறுவனங்களை பார்த்து மக்கள் போட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தங்கம் விலை குறையுமா, வாங்கும் போனஸ் பணத்திலாவது நகை எடுக்க முடியுமா என்பதே நடுத்தர மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+