வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை..1 22 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 30,000 ரூபாயா..?

சென்னை: இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 3,750 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக பவுனுக்கு சுமார் 30,000 ரூபாய். இது தான் தலைப்புச் செய்தியே.

ஆடி மாதம் முடிந்து இப்போது தான் நிச்சயதார்த்தம், திருமணம் என பல நல்ல காரியங்கள் எல்லாம் வரிசையாக நடக்கத் தொடங்கும். அதே நேரத்தில் திருவிழாக்களும் பண்டிகைகளும் கூட வரிசையாக இப்போது தான் களைகட்டும்.

சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த விநாயகர்சதுர்த்தி தொடங்கி இனி வரிசையாக மொஹரம், ஓணம்,தீபாவளி, நவராத்திரி, தசரா, கர்வா சவுத், தீபாவளி, கார்த்திகை பெளர்ணமி, பொங்கல், மகர சங்கராந்தி என பண்டிகைகள் வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றன.

பண்டிகைகள்

பண்டிகைகள்

அது மட்டும் இல்லாமல் இந்த பண்டிகை காலங்களுக்கு இடையிலேயே புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் பொதுவாகச் செய்யமாட்டார்கள். எனவே இந்த பண்டிகை காலத்தில் இருக்கும் நல்ல நாட்களில் செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்கு தங்கம் அத்தியாவசியம் ஆகிறது. அதோடு பண்டிகை காலங்களும் சேர்ந்து கொள்ள தங்கத்தை விலை மேற் கொண்டு பிய்த்துக் கொண்டு போகத் தானே செய்யும்.

வரி

வரி

கடந்த ஜூலை 05, 2019 அன்று நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது தங்கம் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக அதிகரித்தார். மத்திய அரசு கணக்கிட்டு இருப்பது தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க. அதுவே இப்போது தங்கத்தின் விலையை அதிகரித்துவிட்டது. தற்போது இந்தியாவில் இறக்குமதி குறைந்து இருந்தாலும், தங்கத்தை வாங்கிப் போட்டாலும் தங்கள் மகன் அல்லது மகளுக்கு சிறப்பாக திருமணத்தை செய்து கொடுக்க கடன் வாங்கியாவது தங்கத்தை வாங்குகிறார்கள். இதனாலும் விலை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்தியாவின் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வரும் அக்டோபர் மாதத்துக்கான தங்க ஃப்யூச்சர்ஸின் விலை கடந்த சில வாரங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் அக்டோபர் 2019-க்கான ஃப்யூச்சர்ஸின் விலை 39,680 என்கிற உச்சத்தில் நிறைவு அடைந்து இருக்கிறது. இப்படி ஆபரணத் தங்கம் விலை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, வர்த்தகமாகி வரும் தங்கத்தின் விலையும் மறு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

முதலீடு

முதலீடு

அமெரிக்க சீன வர்த்தகப் போர், வட்டி விகித பிரச்னைகள், உலகம் முழுக்க இருக்கும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் உலக பொருளாதாரமே மோசமான மந்த நிலையில் சிக்கிக் கொண்டு இருப்பதால் பணக்காரர்களும், பெரிய பில்லியனர்களும் தங்கள் பணத்தை தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இப்படி பல முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டை தங்கத்தின் மீது செய்வதால் தங்கத்தின் விலை அசுரத் தனமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அவ்வளவு ஏன் பில்லியனர்கள் மற்றும் பணக்காரர்கள் தவிர அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் கூட உலக சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

நம் ஆர்பிஐ போல பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தான் அந்த புதிய வாடிக்கையாளர்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிக் குழுமம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல, பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி வரும் காலங்களில் அதிக அளவில் தங்கத்தை வாங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி மத்திய வங்கிகள் மட்டும் சுமார் 650 டன் வரை இன்னும் அதிக தங்கத்தை வாங்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள். எனவே விலை தாறு மாறாக ஏகிறிக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக செப்டம்பர் 04, 2019 அன்று 40,522 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக செப்டம்பர் 04, 2019 அன்று 37,190 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இது இரண்டுமே கடந்த சில வருடங்களில் இல்லாத புதிய உச்ச விலை என்பதை நாம் கண்ணீர் உடன் கவனிக்க வேண்டி இருக்கிறது.

ஒரே மாதத்தில்

ஒரே மாதத்தில்

கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36,160. ஆனால் இன்று செப்டம்பர் 03, 2019-ல் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 40,522 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமாராக 12 சதவிகிதம் விலை அதிகரித்து இருப்பதை பார்த்து கவலைப் பட வேண்டி இருக்கிறது. 22 கேரட் ஒரு பவுன் ஆபரனத் தங்க விலை சுமாராக 30,000 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+