ஐ.டி.பி.ஐக்கு மீண்டும் கைகொடுக்கும் எல்.ஐ.சி.. மத்திய அரசும் அதிரடி!

டெல்லி : கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மத்திய அரசு முன்னதாக மறு மூலதன நிதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதன நிதியாக 70,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலையில் மத்திய அரசும், எல்.ஐ.சியும் இணைந்து 9,300 கோடி ரூபாய் நிதியை அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி.பி.ஐக்கு மீண்டும் கைகொடுக்கும் எல்.ஐ.சி.. மத்திய அரசும் அதிரடி!

துவண்டு போயுள்ள இந்த வங்கிக்கு, துளிர் விடும் வகையில் மத்திய அரசும் எல்.ஐ.சியும் இந்த நிதியை கொடுக்க முன்வந்துள்ளன. அதிலும் இதனால் ஐ.டி.பி.ஐயின் கடன் பிரச்சனை குறைந்து, இன்னும் வங்கி சேவையை விரைவில் ஆற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மத்திய அரசு 4,557 கோடி ரூபாயும், இதுவே எல்.ஐ.சி 4,743 கோடி ரூபாயும் கொடுக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி, மத்திய அரசு 46.46 சதவிகித பங்குகளையும், இதுவே எல்.ஐ.சி கடந்த ஆகஸ்ட் 2018ல் ஐ.டி.பி.ஐ வங்கியின் 51 சதவிகித பங்கினை (ரூ.21,000 கோடி) எல்.ஐ.சியும் வாங்கியது. இதனால் இந்த இருவரும் இணைந்து, இந்த வங்கிக்கு இப்படி ஒரு மறு மூலதனத்தை வழங்கியது கவனிக்கதக்கது.

இதன் மூலம் வாராக்கடனால் தத்தளித்து வரும் இந்த வங்கிக்கு, கடன் சேவையை அதிகரிக்க முடியும் என்றும், இதன் சேவை இன்னும் விரிவடையும் என்றும் கூறப்படுகிறது.

ஐ.டி.பி.ஐ வங்கி கடந்த ஜூன் காலாண்டில் அதன் நஷ்டம் 3,801 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,410 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் மொத்த செயல்படா சொத்துகள் சொத்து மதிப்பு 8 சதவிகிதமாக கடந்த ஜூன் காலாண்டில் குறைந்துள்ளது.

இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே ஜூன் காலாண்டில் 18.8 சதவிகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பி.சி.ஆர் விகிதம் 87.79 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 64.54 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே ஐடிபிஐ வங்கியை போன்று பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு மறுமூலதன நிதி வழங்கவுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+