மும்பை : வழக்கம் போல இன்று காலை முதல் சற்று ஏற்ற இறக்கத்தை கண்டாலும், சந்தை முடிவில் சற்று ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 161 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36,724 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 46 புள்ளிகள் ஏற்றத்துடன், 10,844 ஆகவும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.06 ரூபாயாகவே வர்த்தகமாகி வருகிறது.

இது ஒரு புறம் எனில், மறுபுறம் இந்த ஏற்றம் நிலையானது அல்ல, இது தற்காலிக ஏற்றம் தான் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
குறிப்பாக அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையானது இப்போதைக்கு முடியும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதே நேரம் இந்த பிரச்சனையால், இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. மேலும் உற்பத்தி துறையும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பும் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
இதுவே இந்திய பங்கு சந்தைகளில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற காரணமாக அமைந்துள்ளது. அதிலும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி அளித்துள்ள அறிக்கையில், கேப்பிட்டல் சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் 2,016 கோடி வெளியேறியுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின்பால் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற நாடுகளில் உள்ள முதலீடுகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்காவின் உற்பத்தி துறை குறித்தான அறிக்கைகள் கடந்த 2016ல் இருந்தே வீழ்ச்சியடைந்து வருவதையே காட்டுகிறது. இது அமெரிக்கா சீனா பிரச்சனையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
எனினும் இந்த நிலையிலும் கூட டாடா ஸ்டீல், பி.பி.சி.எல், ஐ.ஒ.சி, டாக்டர் ரெட்டீஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி 50யில் டாப் கெயினர்களாகவும், இதுவே மாருதி சுசூகி, சன் பார்மா, பிரிட்டானியா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.
இது நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் குறியீடு 1.6 சதவிகித அதிகரிப்பும், இதே ஆட்டோமொபைல் குறியீடானது 1.7 சதவிகிதம் குறைந்தும், நிஃப்டி மீடியா இன்டெக்ஸ் குறியீடு 0.6 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications