இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை அனைத்து வணிக வங்கிகளையும், சில்லறை மற்று சிறு வர்த்தகக் கடன்களின் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 1 முதல் வீட்டுக்கடன், வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் அதிகளவில் குறையும்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி உயர்வு மற்றும் குறைப்புகள் உடனடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வணிக வங்கிகள் பிற அனைத்து கடன்களையும் ரிசர்வ் வங்கி வட்டி அளவீட்டிற்குக் கீழ் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது.
பொருளாதாரம்
நுகர்வோர் மற்றும் வர்த்தகக் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பது தற்போது நலிவடைந்து கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உந்து சக்தியாக விளங்கும். தற்போது நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது.
வட்டி குறைப்பு
இப்படியிருக்கும் நிலையில் இதுநாள் வகையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி குறைப்பை இதுநாள் வரையில் மக்களுக்குக் கொடுக்காமல் லாபத்தை மட்டும் பார்த்து இயங்கும் வணிக வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரெப்போ விகிதம்
சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கி இந்த வருடம் மட்டும் ரெப்போ விகிதத்தில் சுமார் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள நிலையில், வணிகள் வங்கிகள் வெறும் 29 புள்ளிகள் மட்டுமே வட்டியைக் குறைத்துள்ளது. இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்பது புரிகிறது.
வராக் கடன்
ஆனால் கடந்த சில காலாண்டுகளாக வராக் கடன் பிரச்சனையால் இந்தியாவில் பல வங்கிகள் வருவாய் மற்றும் லாப அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே வட்டியை குறைக்காமல் இருக்கிறது.
வட்டி குறைப்பு
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்று ஏற்கனவே சில வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், மீதமுள்ள வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications