அதிக தங்கத்தை ரிசர்வாக வைத்துக் கொண்டு இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 10-வது இடம் கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நெதர்லாந்து தான் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது நெதர்லாந்தை விட சில டன் தங்கத்தை கூடுதலாக வாங்கி இருப்பதால், நெதர்லாந்தை பின்னுக்குத் தள்ளி தற்போது 10-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது இந்தியா.
உலக தங்க கவுன்சிலின் கணக்குப் படி இந்தியா தற்போது 618.2 டன் தங்கத்தை ரிசர்வாக வைத்து இருக்கிறார்கள். நெதர்லாந்து நாடோ 612.5 டன் தங்கத்தை ரிசர்வாக வைத்து இருக்கிறார்கள். இது கடந்த 2019 ஜூலை வரைக்குமான நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆச்சர்யப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்ன தெரியுமா..? நாடுகள் படி கணக்கிட்டால் இந்தியாவுக்கு 9-வது இடம். ஆனால் தங்க ரிசர்வ் வைத்திருக்கும் டாப் 10 பட்டியலில் சர்வதேச பன்னாட்டு நிதியமும் இடம் பிடித்து இருப்பதால் இந்தியாவுக்கு 10-வது இடம்.
உலக அளவில் அமெரிக்கா 8,133 டன் தங்கத்துடன் வழக்கம் போல முதல் இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து ஜெர்மனி 3,366 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. மூன்றாவது இடத்தில் சர்வதேச பன்னாட்டு நிதியம் 2,451 டன் தங்க ரிசர்வ் உடன் இருக்கிறது.
இவர்களுக்குப் பின் தான்
இத்தாலி - 2,451 டன் தங்கம்
பிரான்ஸ் - 2,436 டன் தங்கம்
ரஷ்யா - 2,219 டன் தங்கம்
சீனா - 1,936 டன் தங்கம்
சுவிட்சர்லாந்து - 1,040 டன் தங்கம்
ஜப்பான் - 765 டன் தங்கம்
இந்தியா - 618 டன் தங்கம்
உடன் டாப் 10 இடங்களைப் பிடித்து இருக்கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா..? இந்தியாவின் தங்க பர்சேஸ் கடந்த 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2019 ஜூலை மாதத்தில் குறைவாக வாங்கி இருக்கிறார்களாம். கடந்த 2019 ஜூலையில் வெறும் 13.1 டன் தங்கம் தான் வாங்கினார்களாம்.
இந்தியா கடந்த 2000-ம் ஆண்டில் வெறும் 357 டன் தங்கத்தை மட்டுமே ரிசர்வ்வாக வைத்து இருந்தது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் சுமாராக 270 டன் தங்க ரிசர்வை அதிகரித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications