டெல்லி: ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஜிஎஸ்டி டேர்ன் ஒவர் இருக்கும், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் மற்றும் வியாபாரிகள் இனி ஓவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டிய (Annnual filing) ஜிஎஸ்டிஆர் 9 படிவத்தை, தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளித்து விடலாமா..? என ஜிஎஸ்டி கவுன்சில் ஆழமாக யோசித்துக் கொண்டு இருக்கிறதாம்.
இதுவரை மூன்று முறைக்கு மேல், ஆண்டு இறுதியில் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் 9 படிவத்துக்கு (Annnual filing return) கால அவகாசத்தை நீட்டித்து இருக்கிறார்களாம். ஆனால் இதுவரைக்குமே மொத்தம் 25 - 27 சதவிகிதம் பேர் மட்டுமே தங்கள் ஜிஎஸ்டிஆர் 9 படிவத்தை சமர்பித்து இருக்கிறார்களாம்.

எனவே தான் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஜிஎஸ்டி டேர்ன் ஓவர் இருக்கும் வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர்கள், ஆண்டு இறுதியில் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் 9 படிவத்துக்கு விளக்கு அளித்து விடலாமா..? என வரும் செப்டம்பர் 20, 2019 அன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்களாம்.
தற்போது ஜிஎஸ்டிஆர் 9 வரிப் படிவத்தை நிரப்ப வேண்டியவர்களின் எண்ணிக்கை 1.39 கோடி பேராம். அதில் சுமார் 85 சதவிகிதம் பேரின் ஜிஎஸ்டி டேர்ன் ஓவர் 2 கோடி ரூபாய்க்கு கீழ் இருக்கிறது. எனவே இந்த முடிவை வரும் நவம்பர் 30, 2019 வரை காத்திருந்து எத்தனை பேர் தங்கள் ஆண்டு இறுதியில் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டி படிவத்தை சமர்பிக்கிறார்கள் எனப் பொருத்திருந்து பார்த்த பின் விலக்கு அளிப்பதைப் பற்றி விவாதிக்கலாம், எனவும் சில ஆலோசனைகள் சொல்லப்பட்டு இருக்கிறதாம். அதே போல 2017 - 18 மற்றும் அதற்கு அடுத்தடுத்த நிதி ஆண்டில் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டி படிவங்களுக்கு விலக்கு அளிப்பது பற்றியும் விவாதிக்க இருக்கிறார்களாம்.
ஏன் சிறு குறு தொழிமுனைவோர்கள் மற்றும் வியாபாரிகள் மீது ஏகப்பட்ட சட்ட விதிமுறைகளை பின்பற்றச் சொல்லி திணிக்க வேண்டும்..? என்கிற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அதோடு வரி அதிகாரிகளும் சின்ன சின்ன வியாபாரிகள் சொற்ப வரிகளைச் செலுத்தினார்களா..? என தேடிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக, பெரிய வரி தாரர்களை முறையாக வரி செலுத்த வைக்கும் வேலையில் ஈடுபடட்டும், எனச் சொல்கிறார்கள் வரி நிபுணர்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications