தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்?

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, தற்போது தொடர்ந்து சில நாட்களாக விலை சரிவைக் கண்டு வருகிறது.

கடந்த வாரம் சவரனுக்கு 30,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வந்த தங்கத்தின் விலையானது, கிட்டதட்ட சவரனுக்கு 1000 ரூபாய்க்கும் கீழ் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்?

இந்த நிலையில் இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 28,912 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை, கடந்த வாரத்தில் சென்ற உச்சத்திலிருந்து, 2000 ரூபாய் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக 39,885 ரூபாயாக வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று 37,650 ரூபாயாக குறைந்து வர்த்தமாகி வருகிறது.

இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு சுமார் 47,000 ரூபாயாக வர்த்தகமாகி வந்தது. இது கடந்த வாரத்தில் 51,489 ரூபாயாக வர்த்தகமாகி வந்த நிலையில், கிட்டதட்ட கடந்த வாரத்தில் இருந்து சுமார் 4442 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே தங்கத்தின் விலையானது டாலரில் அவுன்சுக்கு 1,561.90 டாலராக இருந்த விலை, 1,509.75 டாலாராக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தைகளிலேயே மந்த மான நிலை நிலவி வருகிறது. அதிலும் சீனா அமெரிக்கா பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதும், அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு வரி விதிப்பை தள்ளி வைத்திருப்பதும் ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.

அதிலும் அடுத்து வரும் அக்டோபர் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், இந்த பேச்சு வார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வானது சர்வதேச சந்தைகளுக்கு ஊக்கத்தை அளிக்கவே, முதலீடுகள் பங்கு சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையிலேயே தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்த வரை வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தேவை அதிகம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது. எனினும் ஆவணி மாதம் இன்னும் சில தினங்களில் முடிய விருப்பதையடுத்து, இந்த விற்பனையானது புரட்டாசி மாதத்தில் குறையலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்த விலை அதிகரிப்பானது அதிகளவில் மக்களை பாதிக்காது எனினும், விலை தற்போதைக்கு பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+