தங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலை என்ன தான் அதிகரித்தாலும், நம்மவர்களின் விருப்பம் கொஞ்சம் கூட குறைவதில்லை. தங்கம் என்றால் அப்படி ஒர் அலாதி பிரியம். அப்படி இருக்கும் நபர்களுக்கு இது மிக நல்ல செய்தியே.

 

ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் 3 நாட்கள் ஏற்றம் கண்டும், 2 வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. ஒரு புறம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதன் எதிரொலியோ இங்கு இந்திய சந்தையிலும், ஆபரண தங்கத்தின் விலையும் காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய கமாடிட்டி சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இறக்கம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை வீழ்ச்சி

தங்கம் விலை வீழ்ச்சி

குறிப்பாக எம்.சி.எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.66 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 37,600 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் கடந்த சில வாராங்களுக்கு, முன்பு சென்ற அதிகபட்ச உயரமான 39,885 ரூபாயில் இருந்து 2,300 ரூபாய் குறைந்துள்ளது. இதே வெள்ளியின் விலை 51,489 ரூபாய் உயரத்திலிருந்து, சுமார் 5000 ரூபாய்க்கும் மேல் குறைந்து, 46,215 ரூபாயாக குறைந்துள்ளது.

டாலரில் தங்கத்தின் விலை

டாலரில் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் கண்டு வருவதையடுத்து, இந்தியாவிலும் அதன் எதிரொலியே காணப்படுகிறது. இதே சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலையானது 11 டாலர் குறைந்து, 1503 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அதிலும் தற்போது அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளும், சுமூகமான நிலையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில், விரைவில் ஒப்பந்தம் போடப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

தங்கத்தில் முதலீடுகள் குறையலாம்
 

தங்கத்தில் முதலீடுகள் குறையலாம்

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 1.75%மாக குறைத்துள்ளது. இது தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் ஒரு புறம் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை சர்வதேச சந்தைகளில் இருந்து வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் அதிகளவிலான முதலீடுகளை அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

எனினும் தங்கத்தில் விலையானது கடந்த திங்கட்கிழமையிலிருந்து சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை சிறந்த ஹெட்ஜாக தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலையிறக்கம் என்பது அதிகளவில் இல்லாவிட்டாலும், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது

இந்தியாவில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது

எனினும் இந்திய சந்தைகளை பொறுத்த வரை நிலவி வரும் பொருளாதார மந்தம், அதிக வட்டி விகிதம் இவற்றால் தங்கம் இறக்குமதியானது தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் இந்தியாவில் வரவிருக்கு பண்டிகை காலங்களில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆக உலக அலவில் நிலவி வரும் விலை தங்கத்தின் விலை இங்கு சற்று எதிரொலித்தாலும், அதிகப்படியான வரி மற்றும் இறக்குமதி வரி, மற்றும் அதிக்கப்படியான தேவை உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகம் குறையாவிட்டாலும், சற்று குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold தங்கம்
English summary

Why gold prices are going to up and down?

Gold is considered a hedge against crude oil prices when had soaring 20%
Story first published: Thursday, September 19, 2019, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X