அரசுக்கு முக்கிய வருவாயாக இருக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறையும் போது, மாநில அரசுகளுக்கு இழப்பீடு நிதி வழங்குவதில் சிக்கல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது என்றும் கருதப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவாவில் ஜிஎஸ்டி கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி விகிதத்தினை கிட்டதட்ட 10 சதவிகிதம் குறைத்தார். அதிலும் முன்னதாக உள்ள நிறுவனங்களுக்கு 22 சதவிகிதமாகவும், இதே புதியதாய் ஆரம்பிக்கப்படும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்றும் கூறியிருந்தார்.

இதனால் நடப்பு நிதியாண்டில் கணக்கிட்டிருந்தது போல அல்லாமல் ஜிஎஸ்டி வருவாய் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தற்போது மாநில அரசின் வருடாந்திர ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை 14 சதவிகிதத்திற்கு கீழ் குறையும்போது, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தநிலையை அடைந்திருப்பதன் அறிகுறியாக கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், ஜிஎஸ்டி வளர்ச்சி விகிதம் வெறும் 5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது கடந்த ஜூன் காலாண்டில் கண்ட உற்பத்தி வளர்ச்சியானது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது. கடந்த 2012 - 2013ம் வருடத்தில் இந்த ஜிடிபி வளர்ச்சியானது வெறும் 4.3 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு 2019 - 2020 நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிகு வரி வசூல் செய்யப்படும் என்றும் கணித்திருந்தது. மேலும் இது சராசரியாக மாதம் தோறும் 8,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால், வரி வசூலானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,272 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் இந்த வரி வசூலானது வரும் மாதங்களில் இன்னும் குறையலாம் எனவும் கருதப்படுகிறது.
நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மத்திய அரசு 45,784 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கான இழப்பீட்டு நிதியாக விடுவித்தது. மத்திய அரசின் இழப்பீடு வழங்கும் திட்டம் ஜிஎஸ்டி சட்டத்தின் படி, 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், பல மாநில அரசுகள் இதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றன
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications