இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என்று மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கூட்டணி ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் அமெரிக்கச் சில்லறை மற்றும் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டணி இணையும் முன்னரே உடைந்து போய் உள்ளது.
வால்மார்ட் - அமேசான்
பிளிப்கார்ட் உடன் வால்மார்ட் இணைந்தது போல் இந்தியாவிலும் அமேசான் வால்மார்ட் உடன் போட்டிப் போட்ட ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனப் பங்குகளை வாங்க திட்டமிட்டது அமேசான். ஆனால் தற்போது நடந்தது உள்ளது வேறு.
பிளிப்கார்ட் - அமேசான்
இந்தியாவில் ஆஸ்தான கடைகள் மற்றும் ஷாப்பிங் தளங்களை அமைத்தால் தான் இனி இந்தியாவில் வர்த்தகம் செய்ய முடியும் எனப் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களும் முடிவிற்கு வந்துள்ள நிலையில், பிளிப்கார்ட் வால்மார்ட் உடன் இணைந்து வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் பிளிப்கார்ட்-ஐ வாங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் பெரியதாக ஒன்றும் நடக்கவில்லை.
பியூச்சர் குரூப் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்
இந்நிலையில் தான் களத்தில் அமேசான் இறங்கியது, ஆஸ்தான வர்த்தகத்தில் வலிமையான தடத்தைப் பதிக்க வேண்டும் எனத் திட்டமிட்ட அமேசாமன் பியூச்சர் குரூப் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பியூச்சர் குரூப் உடனான டீல் வெற்றிகரமாகச் செய்து முடிந்தது அமேசான். ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் உடன் இதைச் செய்ய முடியவில்லை.
ரிலையன்ஸ் ரீடைல்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் படி ரிலையன்ஸ் ரீடைல் அதிகப்படியான விலைக்குக் கணக்கிடப்படுவதால் அமேசான் இந்நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து இரு நிறுவனங்களும் வெளிப்படையான தகவல்களும் அறிவிக்கப்படாத நிலையில் இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை நின்றுவிட்டதாகவே தெரிகிறது.
10-25 சதவீத பங்கு முதலீடு
இந்தியா முழுவதும் ரீடைல் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 10-25 சதவீத பங்குகளில் முதலீடு செய்து வர்த்தகத்தைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வந்த அமேசானுக்கு ரிலையன்ஸ் ரீடைலின் மதிப்பீடு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3 லட்சம் கோடி ரூபாய்
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 2.5 முதல் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. இது ஓவர் ரேட் என நினைத்த அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் உடனான பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியுள்ளது. இது இரு நிறுவனங்களுக்கும் தோல்வி என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
விடாத அமேசான்
இந்திய வர்த்தகத்தை அடைய வேண்டும் என்கிற தாகம் தீராத அமேசான் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை விட்ட அடுத்த நாளே நாட்டின் முன்னணி ஆடை மற்றும் பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் மேக்ஸ் கடைகளின் உரிமையாளரான லேண்டுமார்க் குரூப் உடன் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications