சமீபத்தில் தான், இந்தியாவின் மறைமுக வரிகளின் முழு முதல் அதிகாரம் கொண்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் நடைபெற்றது. அதுவும் கோவாவில் தான் நடத்தினார்கள். கோவா மாநிலத்தில் நடந்த கூட்டத்திலேயே கோவா மாநிலத்துக்கு நஷ்டம் ஏற்படும் அளவுக்கு அறிவிப்புகள் வந்திருப்பதாக கோவா அரசுத் தரப்பே வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்களாம்.
இந்த கூட்டத்தில் ஹோட்டல் துறையினருக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் துறையினருக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்து இருக்கலாம். அவ்வளவு ஏன் கோவாவில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் பெரிய உற்சாகத்தைக் கொடுத்து இருக்கலாம். ஆனால், கோவா அரசுக்கு இல்லையாம். காரணம் கோவா அரசின் வரி பற்றாக்குறை அதிகரிக்கும் என கவலைப்படுகிறார்கள். கோவா அரசு கஜானா பெரும்பாலும் சுற்றுலாவினாலும், அது சார்ந்த ஹோட்டல் போன்ற பெரிய தொழில்களையும் தான் பெரிய அளவில் நம்பி இருக்கிறதாம். எனவே ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்து இருப்பதால் கோவாவின் கஜானாவுக்கு வரும் வருவாயும் பெரிய அளவில் சரியும் என கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்களாம்.

எனவே கோவா அரசு கஜானாவில் ஏற்பட இருக்கும் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய, கோவா அரசு மத்திய அரசிடம் கூடுதல் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்களாம். ஆனால் இதுவரை ஹோட்டல்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைவால் ஏற்பட இருக்கும் வருவாய் இழப்பை சரி செய்ய எந்த ஒரு திட்டமும் கையில் இல்லை எனவும் கோவா அரசுத் தரப்பில் இருந்தே சொல்கிறார்களாம். ஏற்கனவே கோவா மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை 26 சதவிகிதமாக இருக்கிறதாம். இந்த பற்றாக்குறையையே, மத்திய அரசிடம் கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு வாங்கிக் கொண்டு தான் சமாளித்து வருகிறார்களாம். தற்போது குறைந்திருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களால் மட்டும் ஹோட்டல்களில் இருந்து வரும் வருவாயில் சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுமாம்.
கடந்த வருடம் தான் உணவுகள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது மத்திய ஜிஎஸ்டி கவுன்சில். இதனால், கோவா மாநில அரசு ஒரு பெரிய தொகையை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வருவதற்கு முன் ஒட்டு மொத்த கோவா மாநில அரசின் வருவாயில் உணவகங்களின் மீதான வாட் வரியில் இருந்து ஒரு கணிசமான வருவாய் வந்து கொண்டு இருந்ததாம். ஆனால் ஜிஎஸ்டி வந்த பின் முதலில் கொஞ்சம் சரிந்து, கடந்த ஆண்டில் உணவகங்களில் இருந்து வரும் வருவாய் பெரிய அளவில் சரிந்திருக்கிறதாம்.
ஜிஎஸ்டி கொண்டு வந்ததில் இருந்து, உணவகங்களில் இருந்து மட்டுமே வர வேண்டிய வருவாயில், கோவா மாநில அரசு கஜானா சுமார் 400 கோடி ரூபாய் வரை வருவாயை இழந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை தமிழகத்துக்கும் எளிதில் வரலாம். மறைமுக வரி அதிகாரங்கள் முழுக்க, முழுக்க மத்திய அரசின் வசம் போன பின், மாநிலங்கள் தங்களுக்கான வரி வருவாயை மத்திய அரசிடம் இருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. கோவாவில் பாஜக இருக்கிறது, அவர்களுக்கான பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.
ஆனால் தமிழகத்தில் பாஜக கால் ஊன்றினாலும் வாங்கித் தருமா..? என்பது சந்தேகமே என்கிறார்கள் நெட்டிசன்கள். காரணம் கர்நாடகாவில் ஆளும் பாஜகவிடம் பேசி, உச்ச நீதிமன்றம் கடந்த 50 ஆண்டு காலமாகச் சொல்லி வரும் தண்ணீர் கூட வாங்கித் தர முடியாத தமிழக பாஜக, மத்திய அரசிடம் பேசி, வரி வருவாயை வாங்கிக் கொடுத்து விடுவார்களா..? என்கிற கேள்வி பரவலாக கேட்கிறார்கள் மக்கள். என்ன செய்ய ஜிஎஸ்டி வந்த போதே எதிர்த்து இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டோம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications