உலக பொருளாதாரமே ஒரு பெரிய சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது உலக சந்தைகளில் நிலவும் மந்த நிலைக்கு மத்தியில், இன்று இந்திய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி, விலை உயரப் போராடின.
இன்று எம் சி எக்ஸ் சந்தையில், 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை 0.14 சதவிகிதம் குறைந்து 37,740 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.24 சதவிகிதம் குறைந்து 46,267 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இப்படியாக ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டு இருக்கிறது. தற்போது 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39,240 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக இப்போது ஒரு நல்ல விலை குறைவைப் பார்க்க முடிகிறது. எப்படி எனக் கேட்கிறீர்களா..?
முதல் ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாவது ஏற்றம்
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 29.7 % ஏற்றம் கண்டு இருக்கிறது. ஏன் இவ்வளவு பெரிய ஏற்றம் கண்டது..? பிறகு ஏன் இப்போது தங்கத்தின் விலை குறைந்து வருகிறது..? எனக் கேட்கிறீர்களா..?
காரணங்கள் என்ன
உலக பொருளாதார மந்த நிலை, ரெசசன் பயம், வட்டி விகித பிரச்னைகள் என பல காரணிகளால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறியது. ஆனால் அடிப்படையாக தங்கத்தை வாங்கிப் பயன்படுத்த இந்தியாவில் ஆள் இல்லை என்றால் விலை சரியத் தானே செய்யும். அது தான் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட, போதுமான வியாபாரம் இல்லாததால் நகைக் கடை உரிமையாளர்கள் பலரும், ஒரு பிரமாதமான தள்ளுபடி கொடுத்து தான் தங்கள் வியாபாரத்தைச் செய்ததாக செய்திகளே வெளியானது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு குறைந்து இருக்கிறது
இந்த 2019-ம் ஆண்டிலேயே செப்டம்பர் 04, 2019 அன்று தான் தங்கம் உச்ச விலையைத் தொட்டது. செப்டம்பர் 04, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 37,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39,240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 35,960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
விலை குறைவு
ஆக 10 கிராம் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1,830 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது. அதே போல 10 கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை1,720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. எனவே மக்களே தங்கம் வாங்குவதாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூட காத்திருந்து, விலை போக்கை கவனித்துப் பார்த்து வாங்குங்கள். அவசரப்பட்டு தங்கத்தில் பணத்தை லாக் செய்து விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications