இந்தியாவின் முக்கியமான இரண்டு அல்லது மூன்று மத்திய அரசு நிறுவனங்களில், மத்திய அரசு தன் கையில் வைத்திருக்கும் பங்குகளை விற்று வருவாயைப் பெருக்கப் போகிறதாம்.
இதற்காக நிதி ஆயோக், எரிசக்தி அமைச்சகம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகங்களிடம் கலந்து ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
சமீபத்தில் கூட பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருக்கும் ஒரு கணிசமான பங்குகளை தனியாருக்கு விற்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
சுருக்கமாக ஒரு மத்திய அரசு நிறுவனம் என்றால், அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 51 சதவிகிதத்தை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த விதியை மாற்ற நினைக்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்கின் அளவு 51 சதவிகிதத்துக்குக் கீழும் வைத்துக் கொள்ளுமாறு மாற்ற ஆலோசித்து வருகிறார்களாம். இதற்காக தனியாக சில சட்டங்களைக் கொண்டு வரவும் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.
கொள்கை சிக்கல்
அப்படி ஒருவேளை ஒரு மத்திய அரசு நிறுவனத்தில், மத்திய அரசின் பங்கு 51 சதவிகிதத்துக்குக் கீழ் வந்துவிட்டால், அந்த நிறுவனத்தை மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, மத்திய கணக்கு தணிக்கக் குழுவின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடும். மிக முக்கியமாக மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளில் கூட சில மாற்றங்களளைக் கொண்டு வர வேண்டிய நிலை உருவாகும்.
யோசனை
மேலே சொன்னது போல சி ஏ ஜிக்குள் அரசு நிறுவனங்கள் வருவதை எல்லாம் உறுதி செய்ய, அரசு தரப்பில் இன்னொரு யோசனையையும் முன் வைத்து இருக்கிறார்களாம். ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் மத்திய அரசு மட்டுமே 51 சதவிகித பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்கிற விதியை, மத்திய அரசு மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் வைத்துக் கொள்ளலாம் என மாற்றச் சொல்லி யோசனைகளை முன் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
வருவாய் இல்லை
ஏற்கனவே அரசுக்கு போதுமான வரி வருவாய் இல்லை, அதோடு கார்ப்பரேட் வரி குறைப்பால் சுமார் 1.4 லட்சம் கோடி நஷ்டம், மேற்கொண்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களால் 40,000 கோடி ரூபாய் நஷ்டம் எனவே, இந்த வருவாய் இழப்புகளை எல்லாம் சரி கட்ட, அரசு தன் வசம் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்று வருமானம் பார்க்க திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறது.
உதாரணங்கள்
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் கூட, மத்திய அரசு வைத்திருந்த, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 51 % பங்குகளை 36,900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. 2018 - 19-ல் மத்திய அரசு வைத்திருந்த ஆர் இ சி நிறுவனத்தின் 52.63 % பங்குகலை பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 14,500 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications