மத்திய அரசுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. அதிலும் மோடி 2.0 அரசு பதவியேற்றதிலிருந்தே தொடர்ந்து தொடர்ந்து எல்லாப் பக்கங்களில் இருந்தும் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக உற்பத்தி துறையில் வீழ்ச்சி, அதிலும் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி, இந்த நிலையில் கடந்த ஜூன் மாத மொத்த உற்பத்தி குறித்தான குறியீடு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5% சரிந்து காணப்பட்டது.

இதன் விளைவாக ஜிஎஸ்டி வசூல் விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது, அதிலும் தொடர்ந்து மூன்று மாதமாக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் வசூலாகியுள்ளது.
இவ்வரி அமலுக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களில், மாதம் 1 லட்சம் கோடியை தாண்டியதால் மத்திய அரசு கொண்டாட்டத்தில் இருந்து வந்தது என கூறலாம். ஆனால் கடந்த மூன்று மாதங்களாகவே யார் கண் பட்டதோ தெரியவில்லை 1லட்சம் கோடியை தாண்டவே இல்லை. குறிப்பாக மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 98,202 கோடி ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வசூல், கடந்த செப்டம்பர் மாதத்தில் 91,916 கோடி ரூபாயாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 94,442 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த வசூல் தொகையானது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வசூல் என்றும் கூறப்படுகிறது.
இதே கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூலானது 1.02 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே ஜூன் மாதத்தில் 99,939 கோடி ரூபாயாகவும் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சி.ஜி.எஸ்.டி வசூல் ஆனது 16,630 கோடி ரூபாய் என்றும், இதெ எஸ்.ஜி.எஸ்.டி வசூலானது 22,598 கோடி ரூபாய் என்றும், இதே ஐ.ஜி.எஸ்.டி வசூலானது 45,069 கோடி ரூபாய் வசூல் என்றும், செஸ் வரி 7,620 கோடி ரூபாய் என்றும் நிதியமைச்சகம் என்றும் கூறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார மந்தம், நுகர்வோர் தேவை குறைந்ததன் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவெனில் ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, ஆர்.பி.ஐயிடம் கையேந்தியுள்ள நிலையில், தற்போது மேலும் ஜி.எஸ்,டி விகிதத்தில் துண்டு விழுந்துள்ளது இன்னும் சிக்கலைத் தான் கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருவாயை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வரும் நிலையில், அதிலும் உற்பத்தி துறையில் கண்டுள்ள படு வீழ்ச்சியானது, மத்திய அரசுக்கு பெரிய இடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications