காளையுடன் மோதும் கரடி.. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை : இன்று காலையில் இருந்தே பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், ஏற்ற இறங்கங்களுடன் வர்த்தகமாகிக் கொண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் தற்போதும் சரிவின் விளிம்பிலேயே உள்ளன.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,108 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 11,307 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

காளையுடன் மோதும் கரடி.. சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி!

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலையில் சற்று வீழ்ச்சி கண்டு காணப்பட்டாலும், தற்போது சற்று அதிகரித்து 71.01 ரூபாயாக காணப்படுகிறது.

எனினும் முக்கிய பல துறைகளின் குறீயீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக வங்கித்துறை சார்ந்த குறியீடும், மெட்டல் சார்ந்த குடியீடும் பலத்த அடியே வாங்கியுள்ளன.

எனினும் நாளை நடக்கவிருக்கும் ஆர்.பி.ஐயின் கூட்டத்தில் மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக்கலாம் எனவும், ஏனெனில் மத்திய நிதியமைச்சர் கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைத்துள்ள நிலையில், பணப்புழக்கத்தை அதிகரித்தால், உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும், துவண்டுபோயுள்ள உற்பத்தி துறையை தூக்கி நிறுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் பெரிய அளவிலான இறக்கம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் அதிகப்படியான இறக்கம் தவிர்க்கப்பட்டிருந்தாலும், எல்லாக் குறியீடுகளுமே சிவப்பு நிறத்தில் சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் நிஃப்டி குறியீட்டை பொறுத்த வரையில் யெஸ் பேங்க் 7 ரூபாய் ஏற்றத்துடன் டாப் கெயினராகவும், பி.பிசிஎல், டாடா மோட்டார்ஸ், ஜீ எண்டர்டெய்ன்மென்ட், ஹெச்.சி.எல். டெக் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், இதே சென்செக்ஸ் குறியீட்டிலும், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல் டெக், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடன் நல்ல ஏற்றத்துடனும் உள்ளன.

இதே நிஃப்டி குறியீட்டில் உள்ள வேதாந்தா, ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் அதிகப்படியான இழப்புகளுடனும், இதே சென்செக்ஸ் குறியீட்டில் வேதாந்தா, கோல் இந்தியா, டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் பேங்க் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் அதிகப்படியான நஷ்டத்துடனும் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் மட்டும் அல்ல, மற்ற சர்வதேச சந்தைகளும் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக DAX கிட்டதட்ட 3% சரிவில் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+