இந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை : இந்திய பங்கு சந்தைகள் இன்று காலையில் இருந்தே சரிவில் தொடங்கிய நிலையில், இன்றைய முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்தன. எனினும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பால் அதிகப்படியான இறக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 198 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,106 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 11,314 ஆகவும் முடிவடைந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி!

எனினும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் மதிப்பு 70.89 ரூபாயாக அதிகரித்தும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாளை இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி குறைப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்டாலும், இந்திய சந்தைகள் அதிகப்படியாக வீழ்ச்சி காணவில்லை என்றே கூறலாம்.

மேலும் கச்சா எண்ணெய் விலையும் ரூபாயின் மதிப்பை அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் சவுதி அராம்கோ தாக்குதலுக்கு பின் ஏற்றத்தை மட்டுமே கண்டு வந்த நிலையில் தற்போது சற்று விலை குறைய ஆரம்பித்துள்ளன. இதுவும் ரூபாயின் ஏற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் சர்வதேச அளவில் நடந்து வரும் அமெரிக்கா - சீனா பிரச்சனையும் சுமூகமான தீர்வுகள் எட்டப்படலாம் என்றும், ஏனெனில் இந்த இரு நாடுகளின் பொருளாதார நிலையும் சரிந்துள்ள நிலையில், இதை முன்னேற்றும் விதமாக அமெரிக்கா ஃபெடரல் வங்கியும் வட்டி குறைப்பை அமல்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடு வெளியீட்டில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி காணப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதனால் கட்டாயம் இன்னொரு வட்டிக் குறைப்பை செய்ய வேண்டும் எனவும், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சியுடனேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியே இந்திய பங்கு சந்தைகளிலும் காணப்பட்டது. பொதுவாக அனைத்து இண்டெக்ஸ்களும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும் நிஃப்டி பேங்க் துறையும், பி.எஸ்.இயில் மெட்டல் இண்டெக்ஸூம் அதிகளவு சரிவிலேயே காணப்படுகின்றன.

இதில் யெஸ் பேங்க் நல்ல ஏற்றத்துடன் 34% ஏற்றம் கண்டுள்ளது. இதே டாடா மோட்டார்ஸ் 6% ஏற்றத்துடனும், இதே ஐ.டி.சி,பவர் கிரிட், மற்றும் ஹெச்.சி.எல் டெக் 1.5 - 2% ஏற்றத்துடன் காணப்பட்டன.

இதே வேதாந்தா 4.82%துடனும், டாடா ஸ்டீல் 3.41% இந்தஸ்இந்த் பேங்க் 2.84%, ஹெச்.டி.எஃப்.சி வங்கி 2.04% சரிவுடனும் காணப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+