இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை பொறுத்த வரையில், அரசு என்ன தான் கடுபிடியான நடவடிக்கை எடுத்தாலும் அது குறைவதாக தெரியவில்லை. ஏனெனில் இன்றளவிலும் தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 68 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், அரசு தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியா தங்கம் இறக்குமதியானது வெறும் 26 டன்னாக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டு 81.71 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
இதே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பானது 51 சதவிகிதம் குறைந்து, 1.28 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் இறக்குமதியும் குறைந்துள்ள நிலையில், தேவையும் அதிகரித்துள்ளது. இது மேலும் விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம்
இதற்கு மெருகூட்டும் விதமாகவே சர்வதேச சந்தையிலும் விலையேற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவிலான முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவில், உற்பத்தி குறித்த குறியீடானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் பங்கு சந்தை முதலீடு என்பது இரண்டாவது பட்சமாகவே கருதப்படுகிறது.
வர்த்தகப் போரால் பாதிப்பு
ஏனெனில் பொருளாதார நிலை எப்போது எப்படி மாறும் என்ற நிலையே நிலவி வருகிறது. மேலும் அமெரிக்கா - சீனாவிடையே நிகழ்ந்து வரும் வர்த்தகபோரும் தற்போதைக்கு மவுனமான நிலையில் இருந்து வந்தாலும், இதற்கான தெளிவான முடிவுகள் இன்று வரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் இவ்விரு நாடுகளில் பொருளாதாரம் மிக மோசாமான நிலையிலேயே இருந்து வருகிறது. இவ்விரு நாடுகள் மட்டும் அல்லாது, உலக நாடுகள் அனைத்துமே இந்த வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும்
இந்த நிலையில் இந்தியாவிலும் இதற்கேற்றவாறு தேவை அதிகரித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இன்னும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே கிராமப்புறங்களில் பருவ மழையும் சரியான நேரத்தில் பெய்துள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், இதனால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்படலாம், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்திற்கான விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
விலை நிலவரம்
இந்த நிலையில் இன்று, சென்னையில் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 3,636 ரூபாயாகவும், பவுனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 29.088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு 49,100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இது வரும் வாரங்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications