மும்பை : வர்த்தக நாளின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கின. இதற்கு காரணம் இன்று நடைபெற உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் ஐந்தாவது முறையாக வட்டி குறைப்பு இருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பிலேயே வர்த்தகமாகி வந்தன.
ஏனெனில் வரவிருக்கும் பண்டிகைகாலத்தை கருத்தில் கொண்டு, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த பண்டிகை காலத்தில் கடன் வழங்குதலை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக பொதுத்துறை வங்கிகள் நிறைய கடன் மேளாக்களை நடத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் கூறியிருந்தார். இதன் அடிப்படையிலேயே கடந்த வியாழக்கிழமை முதல், நாடு முழுவதும் கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்பார்த்ததை போல வட்டி குறைப்பும் செய்துள்ளது ஆர்.பி.ஐ.
எனினும் தற்போது இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இந்த வட்டி விகிதம் கைகொடுக்குமா? இந்த வட்டி குறைப்பு போதுமா? என்ற நிலையிலேயே சந்தைகள் தற்போது சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 38,025 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து 11,280 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.86 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, சிப்லா, எஸ்.பி.ஐ, இந்தஸ்இந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஜீ எண்டர்டெயின்மென்ட், பி.பி.சி.எல், ஐ.டி.சி, ஐஓசி, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் அதிகப்படியான நஷ்டத்துடனும் காணப்படுகிறது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தஸ்இந்த் பேங்க், யெஸ் பேங்க், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், இதே ஐ.டி.சி, கோட்டக் மகேந்திரா, ஹெ.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் அதிக இறக்கத்துடனும் காணப்படுகின்றன.
மேலும் நிஃப்டி இண்டெக்ஸில் உள்ள அனைத்து குறியீடுகளும் நல்ல மாற்றத்துடனும், பி.எஸ்.இ இண்டெக்ஸில், கன்சியூமர் அன்ட் டியூரபிள், எஃப்.எம்.சி.சி உள்ளிட்ட துறை குறியீடுகள் மட்டும் சற்று வீழ்ச்சியுடன் காணப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications