ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, ஆட்டொமொபைல் துறையில் விற்பனையை ஊக்குவிப்பதாக அரசு பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் அரசு மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த தொடர்ந்து பற்பல சலுகைகளை வழங்கி வருகிறது.
இதையடுத்து அரசின் சலுகைகளும் வாகன துறையில் அளிக்கப்பட்டு வரும் சலுகையும் விற்பனையை சற்று அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாத விற்பனையானது அதிகரித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க பல தள்ளுபடிகள் சலுகைகள் பெரிதும் உதவியுள்ளன என்றும் கிராண்ட் தோர்ண்டன் இந்தியா எல்எல்பியின் பங்குதாரர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
புதிய வாகனங்களின் அறிமுகமும் இதற்கு சற்று கைகொடுத்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் பயணிகள் வாகன விற்பனையும் மற்றும் இரு சக்கர வாகன விற்பனையும் கடந்த ஆகஸ்ட் மாததுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
மேலும் மத்திய நிதியமைச்சர் குறைத்துள்ள கார்ப்பரேட் வரி விகிதமானது 30 சதவிகிதத்திலிருந்து, 25.17 சதவிகிதமாக குறைத்துள்ளார். இதன் காரணமாக உடனடி விலைக் குறைப்பு தள்ளுபடியை கொடுக்கவும் இது காரணமாக அமைந்தது. இது விற்பனையை ஊக்குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
இது தவிர அரசு சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கார்களை வாங்க மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த அறிக்கையானது நலிந்து போயிருந்த வாகன விற்பனையில் சற்று ஏற்றத்தைக் கொடுத்துள்ளது என்றும், இது இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி குறைப்பானது மேலும் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் இணை இயக்குனர் சிந்தீப் போஹ்ரா கூறியுள்ளார்.
அதிகளவிலான ஜிஎஸ்டி விகிதங்கள், பண்னை பிரச்சனைகள், தேங்கி நிற்கும் ஊதிய பிரச்சனைகள், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒட்டுமொத்த துறையும் மந்த நிலையை எதிர்கொள்கிறது. இதனால் உற்பத்தியும் வியத்தகு முறையில் சரிந்து, வேலை இழப்புக்கு வழி வகுத்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் பயணிகள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையானது மிக மோசமான அளவில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 15,000 ஒப்பந்த ஊழியர்கள் தங்களது ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான வேலை மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி துறை சங்கமான சியாம் எச்சரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications