பவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா? செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா?

தங்கம் தன் செப்டம்பர் 04, 2019 உச்ச விலையில் இருந்து கணிசமாக விலை குறைந்து இருக்கிறது. இன்று சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் ஆபரணத் தங்கத்தை 3,971 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். ஆக 24 கேரட் 8 கிராம் (ஒரு பவுன்) தங்கத்துக்கு 31,768 கொடுக்க வேண்டி இருக்கிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தை 3,638 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.

ஆக 22 கேரட் 8 கிராம் (ஒரு பவுன்) தங்கத்துக்கு 29,104 கொடுக்க வேண்டி இருக்கிறது. நாம் இந்த 22 கேரட் தங்கத்துடனேயே பயணிப்போம்.

நேற்றைய விலை

நேற்றைய விலை

நேற்று இதே ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 3,665 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்துக்கு 22 கேரட் ஆபரணத் தங்கத்துக்கு 29,320 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று கிராமுக்கு 27 ரூபாய் என, ஒரு சவரனுக்கு 216 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.

உச்ச விலை

உச்ச விலை

சமீபத்தில் தங்கத்தின் உச்ச விலை என்றால் அது செப்டம்பர் 04, 2019 தான். அன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தை 3,768 ரூபாய்க்கு விற்றார்கள். ஆக 22 கேரட் 8 கிராம் (ஒரு பவுன்) தங்கத்துக்கு 30,144 கொடுக்க வேண்டி இருந்தது. ஆக இந்த உச்ச விலையில் இருந்து இன்றைய விலையைக் கழித்தால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3,768 - 3,638 = 130 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. இதையே ஒரு பவுனுக்கு கணக்கிட்டால் 22 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராமுக்கு 1,040 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது.

விலை இறக்கம்

விலை இறக்கம்

கடந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின் தங்கம் விலை தொடர்ந்து இறக்கம் கண்டு வந்தது. அந்த செப்டம்பர் 04, 2019-க்குப் பின், தங்கத்தின் விலை மிகக் குறைந்தபட்சமாக அக்டோபர் 01, 2019 அன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 3,545 ரூபாயைத் தொட்டது. ஆனால் அக்டோபர் 01, 2019ல் இருந்து மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது என்பதையும், தங்கம் வாங்க இருப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

விலை ஏற்றப் போக்கு

விலை ஏற்றப் போக்கு

பொதுவாக சர்வதேச சந்தைகளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கான விலை கூடினால் ஒரு கிராம் தங்கத்தின் விலையும் சேர்ந்தே அதிகரிக்கும். இதை ஆங்கிலத்தில் Positie Correlation என்பார்கள். அதே போல உலக பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்தாலோ அல்லது சிறப்பாக முதலீடுகளைச் செய்ய தகுந்த சூழல்கள் இல்லை என்றாலோ தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அவை இரண்டுமே இன்று உலக பொருளாதாரத்தில் இருக்கிறது.

பெரிய ஏற்றம்

பெரிய ஏற்றம்

அப்படித் தான் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கடந்த 2013-க்குப் பின் காணாத விலை ஏற்றங்களைக் காணத் தொடங்கியது. இப்போது வரை உலக பொருளாதார சூழல்களோ அல்லது, முதலீடு செய்ய தகுந்த சூழலோ இல்லை எனவே தங்கம் மேற்கொண்டு விலை ஏறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போது தங்கம் வாங்க இருப்பவர்கள், தீர விசாரித்து இப்போது வாங்கினால் உங்களுக்கு லாபம் என்பதையும் தெரிந்து கொண்டு வாங்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+