டெல்லி : ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளில் முதலீடு செய்ய முதல்கட்ட ஏலதாரர்களை அழைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எப்படியேனும் நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தினை விற்றால் போதும் என்று அரசு ஒரு புறம் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதன் பெரிய அளவிலான கடன் பிரச்சனையினால் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை, அப்படியே முன் வந்தாலும் அரசின் சில கட்டுப்பாடுகளினால் அது, இதுவரை பங்குகளை விற்க முடியாமலே போனது.
மேலும் அரசு குறிப்பிட்ட பங்குகளை வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை விற்க திட்டமிட்டு வந்த நிலையில், ஏர் இந்தியாவின் கடன் பிரச்சனையை கருத்தில் கொண்டு இதுவரை யாரும் இதில் ஆர்வம் தெரிவித்தாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே தற்போது 100 சதவிகித பங்குகளையும் விற்க முடிவுக்கு வந்துள்ளது.
மின்னணு முறையில் ஏலம்
இந்த ஏலத்திற்காக ஏலதாரர்களை அழைக்க அறிவிப்பு தயாராக இருப்பதாகவும், பெரும்பாலும் இந்த அறிவிப்பானது இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில், ஏர் இந்தியாவை வாங்க ஏற்கனவே சில நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்றும் பிடிஐ ஆதாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்த ஏலத்தில் கலந்து கொள்ள Expression of Interest இறுதித் தொடுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும், மிகப்பெரிய கடனுள்ள பொதுத்துறை நிறுவனத்திற்கான ஏலம் புதிதாக உருவாக்கப்பட்ட மின் ஏல முறையில் ஏலம் விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெருத்த கடன்
தற்போது சுமார் 58,000 கோடி ரூபாய் கடனில் உள்ள ஏர் இந்தியா. இது தவிர இன்னும் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது என்றும், குறிப்பாக எண்ணெய் நிறுவனங்களுக்கே பல ஆயிரம் கோடி நிலுவை தொகை இருக்கிறது என்றும், இந்த நிலையில் கடந்த அக்டோபர் 18 அன்று எண்ணெய் நிறுவனங்கள் விமான நிறுவனத்துக்கு எண்ணெய் வினியோகத்தை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டன என்றும் கூறப்படுகிறது.
எரி பொருளுக்கான கடன்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேட் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேட் லிமிடெட் ஆகியவை அக்டோபர் 5ம் தேதி ஏர் இந்தியாவுக்கு கடிதம் எழுந்தியிருந்தாகவும், எனினும் அக்டோபர் 18 வரை, ஏர் இந்தியா இதனை மதிக்கவில்லை என்றும், இந்த மூன்று எரிபொருள் நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா மதிக்கவில்லை
ஏர் இந்தியா கடந்த செப்டம்பர் மாதத்திலேயே எண்ணெய்கான தொகையை, மாதந்திர தவனை தொகையாக மாதம் 100 கோடி ரூபாய் செலுத்த ஓப்புக் கொண்டது. ஆனால் அதன் உறுதிப்பாட்டை ஏர் இந்தியா மதிக்க தவறியது என்றும், இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தும் ஏர் இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 25 - 26 கோடி ரூபாய் எரிபொருளை வாங்குகிறது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
விமான சேவை பாதிப்பு
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏர் இந்தியாவின் கொச்சின், மொஹாலி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாக் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகத்தை நிறுத்திய நிலையில் சிவில் அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் மீண்டும் செப்டம்பர் மாதம் வினியோகம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்படி ஒரு நிலையை ஏர் இந்தியா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications