2020ல் தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபத்தை அளித்த நிலையில், 2021ஆம் ஆண்டிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த 30 வருடத்தில் இல்லாத வகையில் தங்கம் விலை புதிய ஆண்டில் மிகவும் மோசான சரிவைப் பதிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சவரன் தங்கம் 35,000 ரூபாய்க்கும் குறைவான அளவீட்டை அடைந்துள்ள நிலையில், 2021ஆம் ஆண்டில் சுமார் 6 சதவீத சரிவைப் பதிவு செய்து தங்க முதலீட்டாளர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 30 வருடத்தில் ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் சிறப்பான லாபத்தை அளித்து வரும் தங்கம் மீதான முதலீடு இந்த ஆண்டு அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டு உள்ள பொருளாதார ஊக்கத்திட்டத்தின் மூலம், அமெரிக்கப் பத்திர முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாப அளவீடுகள் அதிகரித்துள்ளது.
இதேபோல் 2020 சரிவில் இருந்து உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் வேகமாக மீண்டு வரும் நிலையில் பெருமளவிலான முதலீடுகள் தொடர்ந்து பங்குச்சந்தை, கடன் சந்தைகளுக்குச் சென்று வருகிறது. இதனால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
இதன் மூலம் 2021ல் தங்கம் மீதான முதலீடுகள் சுமார் 30 வருடத்தில் மோசமான துவக்கமாகக் கருதப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு 1991ஆம் ஆண்டில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.