ஆனந்த் மஹிந்திரா இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த தொழிலதிபர். இவர் மகேந்திரா குழுமத்தின் தலைவராக உள்ளார். விண்வெளி, வேளாண் வணிகம், வர்த்தகம், வாகனம் கட்டுமான உபகரணங்கள், தொழில்துறை உபகரணங்கள், எரிசக்தி, தளவாடத் தொழில், தகவல் தொழில்நுட்பம், நில வணிகம், சில்லறை வணிகம் என பல்வேறு துறைகளில் மஹிந்திரா குழுமம் செயல்பட்டு வருகிறது. தன்னுடைய புதுமையான சிந்தனை மற்றும் சமூக ஊடக பயன்பாட்டிற்காக பெரிதும் அறியப்பட்டவர் ஆனந்த் மஹிந்திரா.
தன்னுடைய ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது தனது X பக்கத்தில் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு தோசை வியாபாரியின் வீடியோவை தற்போது பகிர்ந்திருக்கிறார்.. அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக டெஸ்க்டாப் தோசை என்று எழுதியிருந்தார்.

வீடியோவில் தோசை விற்பனையாளர் ஒருவர் பிரிண்டிங் மெஷின் போன்ற இயந்திரத்தில் மாவை ஊற்றுகிறார். உடனடியாக அந்த இயந்திரம் தானாக அவற்றை தோசை போல உருவாக்குகிறது. மேலே எண்ணெய் தேய்த்து உருளைக்கிழங்கை கொண்ட மசாலாவை நிரப்புகிறார். சில நிமிடங்களிலேயே மிருதுவான மற்றும் பொன்னிறமான மொரு மொரு தோசையை தயார் செய்து, அதை அழகாக ரோல் செய்து அனுப்புகிறது. பிறகு அந்த தோசையை வியாபாரி தட்டில் வைத்து சட்னி மற்றும் சாம்பாரை நிரப்பி வழங்குகிறார்.
இந்த வீடியோ ஏற்கனவே "மோகினி ஆப் இன்வெஸ்ட்டிங்" என்ற பக்கத்தால் பகிரப்பட்டிருந்தது. வீடியோவுக்கு 22-ஆம் நூற்றாண்டின் தோசை பிரிண்டிங் மெஷின் என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவை தான் ஆனந்த் மஹிந்திரா அவர்களும் ட்வீட் செய்திருந்தார்.
பகிரப்பட்ட வீடியோவுக்கு பலரும் கமெண்ட்ஸ்களை தெரிவித்து வந்தனர். சில பயனர்கள் தோசை பிரிண்டிங் மெஷின் எதிர்காலத்தில் உணவு துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆதரவாக கூறியிருந்தனர். ஆனால் ஒரு சிலர் பிரபலமான தென்னிந்திய உணவில் மனித தொடுதலை நீக்கி சுவையான உணவை வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த தோசை விற்பனையாளரின் ஸ்டால் பாட்னா கல்லூரிக்கு அருகிலுள்ள லால்பாக்கில் அமைந்துள்ளது. இதற்கு முன்னரும் ஆனந்த் மஹிந்திரா பார்ட் டைம்மாக பிசினஸ் செய்து கொண்டே பிஹெச்டி படிக்கும் மாணவரின் வீடியோவை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ராயன் என்ற அந்த மாணவர் தள்ளுவண்டி கடை நடத்திக் கொண்டே படித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய கல்வி மீதான அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போன ஆனந்த் மஹிந்திரா அவரை பாராட்டும் விதமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications