7 நாளில் 43,660-ல் இருந்து 46,160! டாப் கியரில் பறந்த தங்கம்! இப்ப கொஞ்சம் பிரேக் போடுதே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம். இந்தியர்களுக்கு கண், காது, மூக்கு என அனைத்தின் வழியாகவும் உணர்ந்து தங்கத்தை ரசிப்பார்கள்.

 

எத்தனையோ ஆயிரம் வருடமாக தங்கத்தை மனித சமூகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஆனால் மனிதர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக இந்தியர்களுக்கு. மாறாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

பறந்த தங்கம் விலை

பறந்த தங்கம் விலை

இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை நிலையாக அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ஜனவரி 01, 2020 அன்று 40,750 ரூபாயாக இருந்தது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,810 ரூபாயாக இருக்கிறது.

7 நாள் விலை ஏற்றம்

7 நாள் விலை ஏற்றம்


கடந்த பிப்ரவரி 29, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 43,660 ரூபாயாக இருந்தது. ஆனால் அடுத்த ஏழு நாட்களுக்குள் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டது. கடந்த மார்ச் 06, 2020 அன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,160 என்கிற உச்ச விலையைத் தொட்டது.

எவ்வலவு ஏற்றம்
 

எவ்வலவு ஏற்றம்

ஆக ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 06, 2020 வரையான விலை ஏற்றத்தை கணக்கிட்டால், சுமாராக 66 நாட்களில் தங்கத்தின் விலை 13.2 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அதுவே பிப்ரவரி 29, 2020-ல் இருந்து மார்ச் 06, 2020 வரையான ஏழு நாட்களுக்கு தங்கத்தின் விலையைக் கணக்கிட்டால் 5.7 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.

நிலை பெறும் விலை

நிலை பெறும் விலை

இந்த பயங்கர விலை ஏற்றத்துக்குப் பின், இப்போது தங்கம் விலை ஓரளவுக்கு நிலை பெற்று இருக்கிறது. கடந்த மார்ச் 06, 2020 அன்று 46,160 ரூபாய்க்கு விற்ற 24 கேரட் 10 கிராம் தங்கம், மார்ச் 10, 2020 அன்று 45,810 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. ஆக 24 கேரட் 10 கிராமுக்கு 350 ரூபாய் குறைந்த விலைக்கு தங்கம் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

நிலை பெறும் விலை

நிலை பெறும் விலை

என்னங்க... 24 கேரட் 10 கிராம் தங்கத்துக்கு 350 ரூபாய் எல்லாம் பெரிய விலை இறக்கமா எனக் கேட்டால் இல்லை தான். ஆனால் 7 நாளில் 5.7 % விலை ஏற்றத்தில் இருந்து இப்போது கொஞ்ச கொஞ்சமாக விலை இறங்குகிறது என்றால் நல்ல விஷயம் தானே..! நாம் வாங்கும் ரேஞ்சுக்கு இன்னும் தங்கம் விலை குறைந்தால் நன்றாக இருக்கும். விலை குறையட்டும். பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

24 carat 10 gram Gold price up 5 percent in 7 days now cooling down

The precious yellow metal 24 carat 10 gram gold price has surged around 5.7 percent in 7 days. Now its cooling down.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X