நம் அனைவருக்குள்ளும் ஒரு பெரிய கனவு இருக்கும். அது சொந்த வீடு வாங்குவது, பிள்ளைகளின் படிப்பு செலவு, ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு என ஏதுவாக வேண்டுமெனலும் இருக்கலாம்.
ஆனால், மாத சம்பளம் குறைவாக இருக்கும்போது அந்த கனவை அடைவது எப்படி? இந்தக் கேள்வி பலருக்கு இருக்கிறது. இன்று, மாத சம்பளம் ரூ.25,000 இருந்தாலும் நீண்ட கால முதலீட்டின் மூலம் எப்படி ரூ.1 கோடி சேமிக்க முடியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இலக்கு நிர்ணயம்: முதலில், நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். இங்கு நமது இலக்கு ரூ.1 கோடி சேமிப்பது. அடுத்த கட்டமாக, இந்த இலக்கை எப்படி அடைய முடியும் என்பதற்கான சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
பங்கு முதலீட்டு: பொதுவாக, பங்கு முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபம் கடன் சார்ந்த முதலீட்டுக்களை விட அதிகமாக இருக்கும். பங்கு முதலீட்டுச் சற்று ஆபத்தானது என்றாலும், நீண்ட காலத்தில் அதிக லாபத்தைக் கொடுக்கும் திறன் கொண்டது.
சிப் முறை (Systematic Investment Plan - SIP): ரூ.1 கோடி போன்ற பெரிய தொகையைச் சேமிக்க விரும்பினால், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகளின் சிப் முறையை (Systematic Investment Plan - SIP) தேர்வு செய்வது சிறந்தது. சிப் முறையில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, எடுத்துக்காட்டாக, ரூ.4,000 முதலீடு செய்யலாம். ஆரம்ப முதலீட்டுத் தொகை குறைவாக இருந்தாலும், வட்டிக்கு வட்டி (Compound Interest) மற்றும் காஸ்ட் அவரேஜ் போன்ற காரணங்களால் நீண்ட காலத்தில் பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? (How Much to Invest): மாத சம்பளம் ரூ.25,000 எனில், பெரிய தொகையை முதலீடு செய்வது கடினம். இருப்பினும், மாத வருமானத்தில் 15-20 சதவீதத்தை நீண்ட கால இலக்குகளுக்காக ஒதுக்குவது நல்லது. குறைவான தொகையை முதலீடு செய்யும்போது, இலக்கை அடைய அதிக நேரம் ஆகும் என்பதை தெரிந்துகொண்டு களத்தில்
உதாரணமாக, ஆண்டுக்கு 12% வருமானம் தரும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், ரூ.1 கோடி சேமிக்க 28 வருடங்களுக்கும் மேல் (339 மாதங்கள்) ஆகும்.
மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 12% வட்டி விகிதத்தில் 26 வருடங்களுக்கும் மேல் (317 மாதங்கள்) ஆகும். இதே வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 முதலீடு செய்தார் 1 கோடி ரூபாயை 23 வருடத்தில் பெற முடியும்.
இதன் மூலம் 25000 ரூபாய் மாதம் சம்பளம் வாங்கினாலும் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது பெரிய விஷயமே இல்லை.


Click it and Unblock the Notifications