கொரோனாவுக்கு பிறகு சீனாவில் செயல்பட்டு வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை பிற நாடுகளுக்கு மாற்ற தொடங்கின. அந்த நிறுவனங்களை நம் நாட்டுக்கு இழுக்கும் நோக்கில் மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது.
இந்த திட்டத்தால் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பதோடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். தொலைத்தொடர்பு, ஜவுளி மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட 14 துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதி சலுகைகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டில் லேப்டாப், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பி.சி.க்கள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் பார்ம் பாக்டர் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ஆறு ஆண்டு காலத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான ஐ.டி. ஹார்ட்வேருக்கான புதுப்பிக்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு (பி.எல்.ஐ.) திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தால் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி அதிகரிப்பதோடு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி. ஹார்ட்வேர் துறைக்கும் பி.எல்.ஐ. திட்டம் விரிவுப்படுத்தபட்டதால், டெல், எச்.பி. மற்றும் லெனோவா உள்பட 40 நிறுவனங்கள், இந்த திட்ட காலத்தில் ரூ.4.65 லட்சம் கோடி மதிப்பிலான மடிக்கணினிகள், டேப்லெட், சர்வர்கள் மற்றும் பிற உபகரணங்களை தயாரிக்கும் நோக்கில் இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தன. இதனை பரிசீலனை செய்த அரசு, டெல், பாக்ஸ்கான், எச்.பி., ரைஸ்சிங் ஸ்டார்ஸ், இந்தியா சேல்ஸ் உள்பட 27 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், டெல், எச்.பி. உள்பட மொத்தம் 27 நிறுவனங்கள் ஐ.டி. ஹார்டுவேருக்கான பி.எல்.ஐ. திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 23 நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட நாளிலேயே உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளன. மேலும் 4 நிறுவனங்கள் 90 நாட்களுக்குள உற்பத்தியை தொடங்கும்.
இந்த 27 நிறுவனங்கள் ரூ.3,000 கோடி முதலீடு செய்யும், நேரடியாக 50 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 1.50 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறாத எஞ்சிய நிறுவனங்களை மதிப்பீடு செய்து வருகின்றன. அந்த நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணையும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications