புனே: இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் விற்பனையான இருசக்கர வாகனங்கள் பலவும் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறைகளும் , அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் தான் காரணம் என பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.
புனேயில், பஜாஜ் நிறுவனத்தின் சார்பில் Pulsar NS400Z என்ற புதிய ரக பைக் அறிமுக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பஜாஜ் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், அண்மைகாலமாக இந்தியாவில் வாகனங்களின் விலை உயர்வுக்குக் காரணம், BS VI மற்றும் ABS விதிமுறைகள்தான் என தெரிவித்தார். அதிக வரி மற்றும் கட்டுப்பாடுகளினால் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துவருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

BS VI மற்றும் ABS கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு, ரூ.71,000 ஆக இருந்த பல்சர் 150 பைக்கின் விலை, தற்போது ரூ.1,50,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் விலையை தேவையற்ற முறையில் அரசாங்கம் உயர்த்தியுள்ளது என கூறினார்.
இதற்கு ஜிஎஸ்டி வரி விகிதமே காரணம் என்றும் தெரிவித்தார். இருசக்கர வாகனங்களுக்கு அரசு ஏன் 28% ஜிஎஸ்டி விதிக்கிறது , குறிப்பாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஏன் 28% ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளர்ந்து வரும் மற்ற நாடுகளையும் , அவர்களின் இருசக்கர வாகன சந்தைகளையும் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் மோட்டார்சைக்கிள்களுக்கு 8 முதல் 14% வரை தான் வரி விதிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 125 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன்கொண்ட பைக்குகளுக்கு ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டது, அடுத்த ஆண்டு BS4 விதிமுறைகளை மாற்றியமைத்து, BS6 உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கியது என கூறினார்.
இது போன்ற சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் விதிமுறைகளை கொண்டு வருவதை நான் எதிர்க்கவில்லை , வரியை குறைக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன் என தெரிவித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications