மத்திய அரசின் ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் பலன்களை நிறுவனங்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பாக, தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு இதுவரை 3,000 புகார்கள் வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு இதுவரை 3,000 நுகர்வோர் புகார்கள் வந்துள்ளன. இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு (CBIC) நாங்கள் இந்தப் புகார்களை அனுப்பி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் பலன்களை நுகர்வோருக்கு வழங்காமல், பல நிறுவனங்கள் தவறான தள்ளுபடிகள் மூலம் அவர்களை ஏமாற்றுவது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எனவே, பெறப்பட்ட புகார்களின் தெளிவான விவரங்களைப் பெறுவதற்காக, பல்வேறு துறைகளில் இருந்து வரும் புகார்களை கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சாட்போட் (Chatbot) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜிஎஸ்டி குறைப்பின் முழுப் பலனும் நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்ய, அரசு தனது கண்காணிப்பு அமைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் ஒருங்கிணைந்த வரி முறைதான் சரக்கு மற்றும் சேவை வரி (GST). அண்மையில், பொதுமக்களின் வரி சுமையைக் குறைக்கும் நோக்கில், சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்தது. இந்த ஜிஎஸ்டி குறைப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த ஜிஎஸ்டி குறைப்பால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 375 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளது. உதாரணத்திற்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, டிஷ் வாஷர் ஆகிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதேபோல் வீடு கட்டுவதற்கான சிமெண்ட், எஃகு, ஓடுகள் மற்றும் பெயிண்ட் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக புதிய வீடு வாங்குவோரும் லட்சக்கணக்கில் பணத்தை சேமிக்க முடியும். மேலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், காஃபி தூள், சாக்லேட், பால் பொருட்கள் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல வணிகர்கள் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைந்த பிறகும், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்காமல், பழைய விலையையே தொடர்ந்து வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் மூலம், அரசாங்கம் அளித்த வரி சலுகை வணிகர்களுக்கு மட்டுமே லாபமாக அமைந்து, வாடிக்கையாளர்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வரி ஏய்ப்பைத் தடுத்து, உண்மையான பலன் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே, மத்திய அரசு தற்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications