நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால் இந்திய ரயில்வே வழங்கும் இந்த மூன்று வாட்ஸ்அப் நம்பரைப் பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தலாம். இதன் மூலம் வசதியாக டிக்கெட் முன்பதிவு செய்வது, உணவு ஆர்டர் செய்வது, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை அணுகுவது என அனைத்தையும் வாட்ஸ்அப் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்த பதிவில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
இந்திய ரயில்வே பலருக்கும் பிடித்த ஒரு போக்குவரத்து முறை. இரவு நேர பயணங்களுக்கு ஏற்ற இருக்கைகள், குறைவான டிக்கெட் கட்டணங்கள் போன்றவை இன்றளவும் பயணிகள் அதிகம் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்க காரணமாக உள்ளன. அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள் கீழ்காணும் 3 நம்பர்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதில் சில சேவைகளைப் பெற முடியும்.

டிக்கெட் முன்பதிவு: டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வாட்ஸ்அப் நம்பர் 9881193322 ஆகும். இந்த நம்பரை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், பிஎன்ஆர் ஸ்டேட்டஸ்-ஐ சரி பார்க்கலாம், நிகழ் நேரத்தில் ட்ரெயின் எந்த ஸ்டேஷனில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த நம்பரை பயன்படுத்துவது மிகவும் எளிது. உங்கள் மொபைலில் நம்பரை சேமித்து வாட்ஸ் அப்பில் "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும். அதில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற விவரங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து சேவை பெறலாம்.
உணவு ஆர்டர்: ரயிலில் உணவு ஆர்டர் செய்வதற்கு 8750001323 என்ற நம்பரை பயன்படுத்தலாம். ரயில்வே ஸ்டேஷன்களிலும் உணவு விற்பனை செய்யப்படும். இது தேவைப்படாதவர்கள் இந்த நம்பரை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். சேவையை பெற உங்கள் மொபைலில் நம்பரை சேமித்து உணவு ஆர்டர் செய்வதற்கு "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உணவை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யும் வழிமுறைகளை பின்பற்றி உணவைப் பெறலாம்.
மருத்துவ சேவை: ரயில் பயணத்தின் போது நீங்களோ அல்லது வேறு யாரோ நோய்வாய்ப்பட்டு இருந்தால் மருத்துவ உதவியை பெற 138 என்ற வாட்ஸ்அப் நம்பரை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுக்கு உதவ மருத்துவர் குழு அடுத்த நிலையத்திலேயே வந்தடைவார்கள். இந்த நம்பரை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் நம்பரை சேமித்து "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
இந்த எண்களைச் சேமித்து வைத்து எளிய செயல்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரயில் பயணத்தை மிகவும் வசதியாகவும், தொந்தரவு இல்லாமல் செய்ய முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications