உலகளாவில் கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. பிளாக் மண்டே வீழ்ச்சி, ஹர்ஷத் மேத்தா ஊழல் தாக்கம், டாட்-காம் பபிள் சரிவு, 2008 உலக நிதி நெருக்கடி, கோவிட்-19 பேரிடர், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல அதிர்ச்சிகளை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் பங்குச்சந்தை அவ்வளவு தான், பொருளாதாரம் காலி என்ற கூறப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் மீண்டு வருகிறது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக குறுகிய காலத்தில் சந்தைகள் வீழ்ச்சி கண்டாலும், காலப்போக்கில் அவை மீண்டும் வளர்ச்சி பாதையில் திரும்பியுள்ளன என்பது வரலாறு காட்டும் முக்கிய உண்மை.

குறுகிய கால அதிர்வுகள் vs நீண்டகால வளர்ச்சி
ஒவ்வொரு நெருக்கடியும் வந்த போது பங்கு சந்தை கடுமையாக சரிந்தது. ஆனால் BSE சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 போன்ற முக்கிய குறியீடுகளை நீண்டகால பார்வையில் பார்க்கும்போது, இந்த வீழ்ச்சிகள் அனைத்தும் வளர்ச்சி பயணத்தில் சிறிய இடையூராக மட்டுமே இருந்துள்ளன.
அதாவது, பங்குச்சந்தையில் தடுமாற்றம் என்பது எப்படி இயல்பானதோ, இதேபோல் பொருளாதார சுழற்சிகள் காரணமாக சந்தைகள் ஏற்றத் தாழ்வுகளை தாண்டி மீண்டு வரும் (Recovery) என்பது சந்தையின் அடிப்படை இயல்பாகவே உள்ளது.
வரலாறு என்ன சொல்கிறது?
உலகப்போரிலிருந்து சமீபத்திய மத்திய கிழக்கு மோதல்கள் வரை பல்வேறு நிகழ்வுகளில் பங்குச்சந்தைகள் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டாலும், அதன் மீட்சி என்பது வேகமாகவே ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் சந்தை சுமார் 25% வீழ்ச்சி கண்டது. ஆனால் 2 ஆண்டுகளில் மீண்டும் உயர்ந்தது. 1999 கார்கில் போரில் சுமார் 12% வீழ்ச்சி ஏற்பட்டாலும், வெறும் 2 மாதங்களில் மீண்டது. 2008 உலக நிதி நெருக்கடியில் கடுமையான 60% வீழ்ச்சி இருந்தபோதும், 18 மாதங்களில் மீட்பு நடந்தது.
அதேபோல், 2020 கோவிட் காலத்தில் 38% சரிவு ஏற்பட்ட சந்தை, 7 மாதங்களில் மீண்டும் உயர்ந்தது. சமீபத்திய ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்களிலும் குறுகிய கால பாதிப்புகள் இருந்தாலும், மீட்பு விரைவாகவே நடந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு முக்கிய சிக்னல்
இந்த வரலாற்று தரவுகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு தெளிவான தகவலை அளிக்கிறது. சந்தைகள் பொதுவாக அச்சத்திற்கு உடனடி பதில் அளிக்கும், அச்சம் குறைந்த உடன் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும். இதேபோல் பங்குச்சந்தையில் நீண்டகால செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றால், பங்குச்சந்தை சரிவில் பயந்து விற்கும் முதலீட்டாளர்களால் உருவாக்க முடியாது, அமைதியாக இருந்து தொடர்ந்து முதலீடு செய்பவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
ஆனால் அமைதியாக இருந்து நீண்ட கால அடிப்படையில் முதலீட்டு செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய நிறுவன பங்குகளின் நிதி நிலை மற்றும் வரலாற்று வளர்ச்சி ஆகிய தரவுகளை ஆய்வு செய்து அடுத்த 5-10-15 வருடத்திற்கு வளரும் வாய்ப்பை கொண்டு உள்ளதா என்பதை உறுதி செய்து முதலீடு செய்ய வேண்டும்.
குறுகிய காலத்தில் சந்தையை சரியாக கணிப்பது என்பது கடினமான விஷயம். ஆனால் நீண்டகாலத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால் 'காம்பவுண்டிங்' எனப்படும் வளர்ச்சி மூலம் அதிக லாபம் கிடைக்கும். இன்று சந்தையில் நீங்கள் பார்க்கும் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் நீண்டகால அடிப்படையிலான முதலீட்டின் வழியாகவே பெரும் சொத்தை சேர்ந்துள்ளனர்.
இதேபோல் ஒரு பங்கில் எப்போது நுழைகிறோம், எந்த மதிப்பீட்டில் வாங்குகிறோம், சந்தையில் அதன் வளர்ச்சி வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அடிப்படையிலேயே இந்த காம்பவுண்டிங் வளர்ச்சி நடக்கும்.

பங்குச்சந்தை முதலீட்டின் இரு தூண்கள்
பங்குச்சந்தை முதலீட்டில் வெற்றி பெற முக்கியமானது 'எப்போது வாங்குவது?' என்பதல்ல; 'எவ்வளவு காலம் முதலீட்டில் இருப்பது?' என்பதுதான். சந்தை ஒவ்வொரு முறையும் சரிவடைந்தபோது பதற்றம் அதிகரிக்கும். ஆனால் அந்த நேரத்தில் அமைதியாக இருப்பது தான் உண்மையான முதலீட்டு திறன்.
தலைப்புச் செய்திகள் மற்றும் குறுகியகால மாற்றங்களுக்கு ஏற்ப முதலீடு செய்வதை காட்டிலும், நீண்டகால நோக்குடன் திட்டமிட்ட முதலீடு செய்தவர்கள் தான் அதிக லாபம் அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம் என்ன?
பங்கு சந்தை எப்போதும் சீராக இயங்காது. அது சில நேரங்களில் குழப்பமாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் வரலாறு தெளிவாக காட்டுவது என்னவென்றால், எந்த அளவுக்கு சந்தை சரிந்தாலும் காலப்போக்கில் சந்தை தன்னைத்தானே சரிசெய்து வளர்ச்சி அடைகிறது என்பது தான்.

More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications