புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்குகிறது, இது நம் அனைவரது பணப்பையையும் நேரடியாக பாதிக்கும் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. ஓய்வூதிய திட்டங்களில் மாற்றங்கள், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்கள் என பல நிதி தொடர்பான விதிமுறைகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வருமான வரி விதிப்பில் இருந்து பல மாற்றங்கள் வருகிறது. வருமான வரி மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள இதை கிளிக் ஏப்ரல் 1 முதல் வருமான வரியில் இத்தனை மாற்றங்களா.. முதல்ல இதை பாலோ பண்ணுங்க..!! செய்யவும், இதர முக்கியமான மாற்றங்களை இப்போது பார்ப்போம்.

புதிய தேசிய ஓய்வூதியத் திட்ட விதி: தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) ஒழுங்குபடுத்தும் அமைப்பு, பயனர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, CRA அமைப்பில் உள்நுழைய அனைத்து பயனர்களுக்கும் இரண்டு காரணி ஆதார் அங்கீகரிப்பு (2-FA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஓய்வூதியத் திட்ட பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.
SBI கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளன. அவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதன்மையானது. பொதுத்துறையில் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது.
இந்த விதி மாற்றம் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றம் AURUM, எஸ்.பி.ஐ கார்டு எலைட், எஸ்.பி.ஐ கார்டு எலைட் அட்வாண்டேஜ், எஸ்.பி.ஐ கார்டு பல்ஸ் மற்றும் சிம்பிளி கிளிக் எஸ்.பி.ஐ கார்டு போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும்.
ICICI வங்கி கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்கள் கிரெடிட் கார்டு சலுகைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி, முந்தைய காலாண்டில் ரூ.35,000 செலவழித்த கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி இலவச விமான நிலைய லாஞ்ச் அணுகலை வழங்கும். கடந்த காலாண்டில் செலவழித்த தொகையைப் பொறுத்து அடுத்த காலாண்டில் இந்த சலுகை வழங்கப்படும்.
யெஸ் வங்கி கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம்: ஏப்ரல் 1, 2024 முதல், ஒரு காலாண்டில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் யெஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச உள்நாட்டு லாஞ்ச் அணுகலைப் பெற தகுதி பெறுவார்கள்.
5. ஓலா மணி வாலட் மாற்றம் : புதிய நிதியாண்டில் ஓலா மணி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! ஓலா மணி நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, நிறுவனம் தனது கணக்குகளை "சிறு வாலட்" (Small PPI) ஆக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 1, 2024 முதல் ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்றுவதற்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.
அதிகபட்ச பணம் ஏற்றுதல்: புதிய விதிமுறைகளின்படி, ஒரு மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே ஓலா மணி வாலட்டில் பணம் ஏற்ற முடியும். முன்னதாக, இந்த வரம்பு அதிகமாக இருந்தது.
பாதிப்பு யாருக்கு?: அதிக தொகையை ஓலா கேப் (Ola Cab) சவாரிகளுக்காக அல்லது பிற ஆன்லைன் கட்டணங்களுக்காக ஓலா மணி வாலட்டை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications