மார்ச் 31 முதல் 2023-24 ஆம் நிதியாண்டு முடியும் வேளையில், புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல், அதானது இன்று முதல் தொடங்குகிறது. இந்த புதிய நிதியாண்டில் மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வருமான வரி சம்பந்தமான மாற்றங்கள் இந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும்.

இந்த நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வருமான வரி மாற்றங்கள் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்வோம் வாங்க.
புதிய வரி முறை - டீபால்ட் தேர்வாகிறது!: வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், புதிய வரி முறையில் அதிகமானோர் பங்கேற்க ஊக்குவிக்கும் நோக்கத்திலும், மத்திய நிதியமைச்சகம் புதிய வரி முறையே இயல்பான தேர்வாக அதாவது default Option ஆக இருக்கும். இருப்பினும், தனிநபர் பழைய வரி முறையில் தங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்தால் வரி செலுத்துவோர் பழைய வரி முறையைத் தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரம் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
புதிய வரி பலகைகள் (New Tax Slabs): புதிய வரி முறையில் வரி விதிக்கப்படும் தொகைக்கான வரம்புகள் (Tax Slabs) மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இனி வரும் நிதியாண்டில், ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும், ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், ரூ. 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும்.
வரி செலுத்துபவர்களுக்கு இனி குறைந்த வரிச் சுமை: முன்னதாக பழைய வரி முறையில் மட்டுமே வழங்கப்பட்ட ரூ.50,000/- என்ற நிலையான விலக்கு (Standard Deduction) தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். இதன் காரணமாக, புதிய வரி முறையில் வரி செலுத்துபவர்களின் வரிக்குட்பட்ட வருமானம் கூடுதலாக குறையும்.
பெரும் செல்வந்தர்களுக்கான வரிச் சுமை குறைப்பு!: ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்கும்.
ஆயுள் காப்பீட்டு முதிர்வு தொகைக்கு வரி: ஏப்ரல் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை, மொத்த பிரீமியம் ரூ.5 லட்சத்தை மீறினால், அந்தத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
விடுப்புச் சம்பள விலக்கு: அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்திற்கான ( leave encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கூடுதல் விபரத்திற்கு இதை கிளிக் செய்யவும் - https://tamil.goodreturns.in/classroom/how-leave-encashment-will-be-taxed-036815.html
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications