பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. ஏன் இந்த சரிவு.. என்ன காரணம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தோம். இந்த வாரம் F&O எக்ஸ்பெய்ரி உள்ளது. இதனால் சந்தை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும் என்றும் கூறியிருந்தோம்.

இந்த நிலையில் இன்று அதனை பிரதிபலிப்பது போலவே சென்செக்ஸ், நிஃப்டி இரண்டுமே வீழ்ச்சி கண்டுள்ளது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1115 புள்ளிகள் குறைந்து, 36,553 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 326 புள்ளிகள் குறைந்து, 10,805 ஆகவும் முடிவடைந்துள்ளது. சரி என்ன காரணம்? சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளதே வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையின் எதிரொலி

சர்வதேச சந்தையின் எதிரொலி

சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலைகளுக்கு மத்தியில், ஆசிய சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவிலேயே தொடங்கின. குறிப்பாக சர்வதேச சந்தைகளாக ஷாங்காய் காம்போசைட் மற்றும் கோஸ்பி 2% வீழ்ச்சியுடன், இதே நிக்கி 1% வீழ்ச்சியுடன் காணப்படுகிறது. இதற்கிடையில் இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சரிவினைக் கண்டுள்ளது.

இதே அமெரிக்காவில் நிதி ஊக்கம் குறித்தான நிச்சயமற்ற கவலைகளுக்கு மத்தியில், வணிக நடவடிக்கைகள் குறித்தான தரவும் சந்தைக்கு சாதகமாக இல்லை. இதனால் அமெரிக்க பங்குகளும் கடும் சரிவினைக் கண்டன.

 

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்

இந்தியாவில் தற்போது மற்ற உலக நாடுகளை விட அதிகளவில் கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சுமார் 57,32,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே பலி எண்ணிக்கையானது 91,149 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளாவிலான கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன.

நிச்சயமற்ற பொருளாதாரம்

நிச்சயமற்ற பொருளாதாரம்

பொருளாதார மீட்சி குறித்தான நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் உணர்வும் எதிர்மறையாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியினை காணும் என்றாலும், இது எந்தளவுக்கு வீழ்ச்சி காணும் என்பது பெரும் பதற்றத்தினையே காட்டுகிறது. இதுவும் சந்தை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி

இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் முதலீட்டாளர்கள் கையில் இருக்கும், ஆர்டர்களை விற்று அடுத்த கான்டிராக்டுகளில் ரோல் ஓவர் செய்வதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எனினும் வல்லுனர்கள் நிஃப்டியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 11,300 - 11,400 ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

 

டெக்னிக்கல் சப்போர்ட்

டெக்னிக்கல் சப்போர்ட்

நிஃப்டியின் அடுத்த முக்கிய சப்போர்ட் - 11,000 - 10,950 ரெசிஸ்டன்ஸ் லெவல் - 11,250 -11,300, இதே 11,300 லெவலை தாண்டும்போது 11,450/11,500 லெவலை தொடலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+