இந்தியாவில் கோடிக்கணக்கில் மறைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை கண்முன்னே நிறுத்தும் வகையில், ஒரு அதிர்ச்சி தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ரியல் எஸ்டேட் முகவர் மூலம் கிடைத்த தகவலின்படி, ஒரு தொழிலதிபர் 5 கிலோ தங்கத்தையும், 200 கிலோ வெள்ளியையும் பணமாக்கி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முயன்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எஸ்க் தளத்தில், @realhyderabad86 என்ற பெயரில் இயங்கும் பயனர் பகிர்ந்துள்ளார். அந்த ரியல் எஸ்டேட் முகவர், ஒரு மார்வாடி தொழிலதிபருக்காக முதலீட்டு வாய்ப்பைத் தேடி வந்தார். அந்த வாடிக்கையாளர் 5 கிலோ தங்கம் மற்றும் 200 கிலோ வெள்ளியை விற்று ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சந்தையின் தற்போதைய விலையின்படி, 5 கிலோ (5,000 கிராம்) தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.6.44 கோடியும், 200 கிலோ (2,00,000 கிராம்) வெள்ளியின் மதிப்பு சுமார் ரூ.3.8 கோடியும் என மொத்தத்தில், அந்த மார்வாடி தொழிலதிபர் சுமார் ரூ.10.24 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைப் பணமாக்கி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ரொக்கப் பணப் பரிவர்த்தனை சம்பந்தப்பட்டது என்று தெரிந்ததும், அதனை ஏற்க மறுத்ததாக அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற நபர்கள் சந்தையை உன்னிப்பாக கணித்து, அதில் முதலீடு செய்வதில் திறமையானவர்களாக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒருவர் வாழ்க்கையின் முழு காலத்திலும் சம்பாதிக்க முடியாத அளவிற்கு, இந்த தொழிலதிபர் வைத்திருந்த பணம் மிகப்பெரியது. ஆனால், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் எப்படி ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் மறைமுகமாக முதலீடு செய்யப்படுகின்றன என்பது தான் இங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ள நிலையில், இந்த முதலீட்டாளர் லாபத்தைப் பதிவு செய்ய முடிவு செய்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. தங்கம் 2025-ஆம் ஆண்டில் 50%க்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்கா - சீனா வர்த்தகப் பதட்டங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,200 டாலரை நெருங்கி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த விலை உயர்வுகளால், தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், பல முதலீட்டாளர்கள் தற்போது அதிக லாபத்தை ஈட்டும் நம்பிக்கையில் மலிவான வெள்ளியை நோக்கி திரும்பி உள்ளனர். தொழில் துறையில் பயன்படுத்தப்படும் உலோகமாக இருந்தாலும், வெள்ளி இந்த ஆண்டு மட்டும் 70%-க்கும் அதிகமாக விலை உயர்ந்து, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக வலுவான ஆண்டாக மாறி உள்ளது. பாங்க் ஆஃப் அமெரிக்கா குளோபல் ரிசர்ச் நிறுவனம், தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் 5,000 அமெரிக்க டாலரை எட்டும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!



Click it and Unblock the Notifications