இந்திய பங்குச்சந்தையை உலுக்கிய 5 மிகப் பெரிய மோசடிகள்..!!

நாட்டில் நடைபெறும் அனைத்து நிதி மோசடிகளுமே பங்குச் சந்தையை மிகவும் பாதிக்கும். காரணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் அச்சம். இந்தியப் பங்குச்சந்தையிலும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று நாட்டையே அதிரவைத்தன.

பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) முதலீட்டாளர்களுக்கு ஒரு வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க சந்தைகள் மற்றும் துணைச் சட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. இருந்தாலும் மோசடியாளர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்திய பங்குச்சந்தையை உலுக்கிய 5 மிகப் பெரிய மோசடிகள்..!!


இப்போது நெட்பிளிக்ஸ், சோனி போன்ற ஓடிடி தளங்களில், பேட் பாய்ஸ் பில்லியனர்ஸ், தி ஸ்கேம் 1992 போன்ற பங்குச்சந்தை மோசடி மன்னர்கள் பற்றிய வெப்சீரிஸ்கள் ஒளிபரப்பப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றி சற்று அலச வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் பங்குச்சந்தையை உலுக்கிய 5 பெரிய மோசடிகள் பற்றி பார்க்கலாம்.

ஹர்ஷத் மேத்தா மோசடி: இந்திய பங்குச் சந்தைகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மோசடிகளில் ஒன்று இது. 'செக்யூரிட்டி ஸ்கேம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சுமார் 3,500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குத் தரகரான ஹர்ஷத் மேத்தா, ஏப்ரல் 1991 முதல் மே 1992 வரை பம்பாய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து வங்கிகளிடமிருந்து பணம் திரட்டினார்.

இதன் விளைவாக, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,194 புள்ளிகளில் இருந்து 4,500 புள்ளிகளாக உயர்ந்தது - 274 சதவீதம் லாபம். சந்தை புதிய உச்சத்தைத் தொட்டதால், மக்கள் அவரை 'பிக் புல்’ என்று பார்க்கத் தொடங்கி, அவர் முதலீடு செய்யும் பங்குகளை வாங்கத் தொடங்கினர்.

பல சில்லறை முதலீட்டாளர்கள் பங்குகளில் கணிசமான தொகையை முதலீடு செய்தனர். ஆகஸ்ட் 1992 இல், பாரத ஸ்டேட் வங்கி அரசாங்கப் பத்திரங்களில் பற்றாக்குறை இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் விசாரணை நடத்தியபோது ஹர்ஷத் மேத்தா செய்த ரூ.3,500 கோடி மோசடி அம்பலமானது. அவர் 1992 இல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2001 இல் மாரடைப்பு காரணமாக சிறையில் இறந்தார். பின்னர், ஹர்ஷத் மேத்தா வைத்திருந்த பல பங்குகள் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டு அவர் சார்பாக சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்தது.

கேதன் பரேக் ஊழல்: சார்ட்டர்டு அக்கவுன்டன்டான கேதன் பரேக், 90களில் ஹர்ஷத் மேத்தாவுடன் அவரது நிறுவனமான க்ரோமோர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஹர்ஷத் மேத்தாவின் வாரிசு என்றும் அழைக்கப்படும் கேதன் பரேக், பங்கு விலைகளைக் கையாள மேத்தாவைப் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தினார். பரேக், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தை எடுத்து, பங்குகளின் மதிப்பை அதிகரிக்க சட்டவிரோதமாக முதலீடு செய்தார்.

கே-10 பங்கு எனப்படும் பத்து பங்குகளின் தொகுப்பில் முதலீடு செய்தார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிமாச்சல் ஃபியூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன், முக்தா ஆர்ட்ஸ், டிப்ஸ், ப்ரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ், ஜிடிஎல், ஜீ டெலிஃபிலிம்ஸ், பென்டாமீடியா கிராபிக்ஸ், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஆப்டெக் இன்ஃபோசிஸ் ஆகியவை இதில் அடங்கும்.

இறுதியில், இந்த K-10 பங்குகள் பியர்கள் எனப்படும் தரகர்களால் குறிவைத்து சாய்க்கப்பட்டன. அந்தப் பங்குகள் மதிப்பு சரிந்து சில்லறை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. 2001 ஆம் ஆண்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் 176 புள்ளிகள் சரிந்தபோது பரேக்கின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில் அவரது மோசடி தெரியவந்தது. இறுதியில், அவர் தனது அனைத்து பங்குகளையும் விற்றார். இதனால் சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது.

சத்யம் மோசடி: 2009 இல், இந்தியா தனது மிகப்பெரிய நிறுவன மோசடியை வெளிப்படுத்தியது. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிமிடெட் (SCSL) இன் தலைவர் மற்றும் பிற மூத்த உறுப்பினர்கள், 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விற்பனை மற்றும் லாபத்தில் அதிகரிப்பைக் காட்ட நிறுவனத்தின் கணக்குகள் கையாளப்பட்டதாக செபி முன் ஒப்புக்கொண்டனர்.

இந்த மோசடி சுமார் 7000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை முடக்கி, அது தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போதிலும், சந்தைகள் நிலைகுலைந்தன. சத்யம் நிறுவனத்தின் பங்குகள் அடிமட்டத்தை தொட்டது.

இறுதியில், சத்யம் தலைவர் ராஜூ மற்றும் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். நிறுவனம் மஹிந்திரா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டு மஹிந்திரா சத்யம் என மறுபெயரிடப்பட்டது.

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் மோசடி: நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் என்பது ஒரு கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆகும்.
இது விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களில் வர்த்தகத்தை செய்தது.

ஜிக்னேஷ் ஷா இந்த எக்ஸ்சேஞ்சின் புரோமோட்டராக இருந்தார். பங்குச் சந்தையைப் போலவே, கமாடிட்டி எக்ஸ்சேஞ்சிலும், வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒருவரையொருவர் அறிந்திருக்க மாட்டார்கள்.

வர்த்தகம் முடிந்ததும், பொருள் வாங்குபவருக்கு அனுப்பப்படுகிறது. நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் முதலீட்டை கவர்ச்சிகரமானதாக மாற்ற விதிகளை திரித்து பல சில்லறை முதலீட்டாளர்களை ஈர்த்தது.

கூட்டு ஒப்பந்தங்களில் நிலையான வருமானத்தை வழங்கியது. இந்த ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக எந்த பொருளும் இல்லை.
ஒப்பந்தங்கள் மூலம் வந்த பணம் பரிமாற்றத்தில் தங்கி, மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், சில வியாபாரிகளுக்கு வசதியாக பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில், ஃபார்வர்ட் மார்க்கெட் கமிஷன் (எஃப்எம்சி) இந்த முரண்பாட்டை உணர்ந்து, புதிய ஆர்டர்களை நிறுத்துமாறு என்எஸ்இஎல்-க்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து என்எஸ்இஎல் அதன் முதலீட்டாளர்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கியது, இதில் மொத்தம் 5600 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

நிரவ் மோடி ஊழல்: இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியை 11300 கோடி ரூபாய்க்கு மோசடி செய்த கோடீஸ்வர நகை வியாபாரி நிரவ் மோடி, இந்தியாவில் வங்கித் துறையில் சமீபத்திய மோசடியைச் செய்துள்ளார்.

அவர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்- PNB வங்கிக் கிளையில் போலியான ஒப்பந்தக் கடிதங்களை (LoUs) வாங்கி, அவற்றைப் பயன்படுத்தி இந்தியக் கடன் வழங்குபவர்களிடமிருந்து வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றார்.

2018 ஆம் ஆண்டில், பிஎன்பி அதன் கிளைகளில் ஒன்றில் சில அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மற்றும் மோசடிகள் நடப்பது குறித்து செபி மற்றும் சிபிஐக்கு தெரிவித்தது. இந்தத் தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டபோது, பிஎன்பி பங்குகள் சரிந்து சந்தையும் மந்தநிலைக்குச் சென்றது.

துரதிர்ஷ்டவசமாக, நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி (நீரவ் மோடியின் மாமா மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ்) கைது செய்யப்படுவதற்கு முன்பே, அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர். இதுவரை அவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை.


Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+