தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணமாக அணிவது மட்டுமல்லாமல் தங்கத்தை ஒரு முதலீடாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். விலை அதிகமாக இருப்பதால் போலி நகைகளும் சந்தையில் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. எனவே தங்கம் வாங்கும் முதலீட்டாளர்கள் அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் தரம் சரியாக இருக்குமா? என்று யோசிக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான நுகர்வோர் நம்பகமான கடைகளில் மட்டுமே நகை வாங்க திட்டமிடுகின்றனர்.
ஆனால் எல்லோராலும் பிரபல பிராண்டுகளை நோக்கி செல்ல முடியாது. சிலர் கிராமங்களில் வசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அருகில் உள்ள நகைக்கடைகள் தான் சிறந்தத் தேர்வாக இருக்கும். அப்படி இருக்கையில் எந்தெந்த வழிகளைப் பின்பற்றி நுகர்வோர் தாங்கள் வாங்கும் தங்க நகைகளின் தூய்மையை சரிபார்க்க முடியும்? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

சில காலமாகவே தொடர்ந்து மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. 18 கேரட் தங்கத்தை 22 கேரட் தங்கம் என்று கூறி விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் நம் நாட்டில் நடந்துள்ளது. எனவே உண்மையான தங்கத்தை அடையாளம் காண்பதற்கு சில வழிகள் உள்ளன.
BIS ஹால்மார்க்: தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று BIS ஹால்மார்க் முத்திரை இதுவாகும். இந்த முத்திரையை உலோகத்தின் தூய்மையை உறுதிப்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது. 22 கேரட் தங்கமாக இருந்தால் 22K916 என்ற ஹால்மார்க் முத்திரை நகைகளில் பொறிக்கப்பட வேண்டும். 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இந்த முத்திரை இல்லாவிட்டாலோ அல்லது சரியாக தெரியாமல் இருந்தாலோ அந்த தங்கம் தரம் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
லூம் நம்பர்: ஹால்மார்க் முத்திரையுடன் கூடுதலாக நுகர்வோர் தாங்கள் வாங்கும் நகைகளில் லூம் நம்பர் இருக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஹால்மார்க் செய்யப்பட்ட அனைத்து நகைகளிலும் இந்த லூம் நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நம்பர் நகைக்கடைக்காரர் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்தும். மேலும் நகையின் உற்பத்தி விவரங்களை அறியவும் இந்த லூம் நம்பர் உதவும்.
ரசீது: சில போலி தங்க நகை விற்பனையாளர்கள் போலியான ஹால்மார்க் முத்திரைகளைப் பயன்படுத்தி நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவார்கள். இதைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் கேரட் மதிப்பு, எடை, செய்கூலி, வரி போன்றவற்றை உள்ளடக்கிய ரசீதை கட்டாயம் வாங்க வேண்டும்.
கோல்ட் டெஸ்டிங் மெஷின்: பல பிராண்டட் நகைக்கடைகள் இப்போது சான்றளிக்கப்பட்ட கோல்ட் டெஸ்டிங் மெஷின்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த மிஷின்கள் தங்கத்தின் தூய்மையை விரைவாகவும், துல்லியமாகவும் சரிபார்க்க உதவும்.
காந்த சோதனை: இது எளிமையாக செய்யக்கூடிய சோதனை. காந்தத்தை நீங்கள் பரிசோதிக்க விரும்பும் தங்கத்தின் அருகில் கொண்டு செல்லுங்கள். தங்கம் காந்தத்தில் ஈர்க்கப்பட்டால் அது போலியானதாக இருக்கலாம். அப்படி இல்லை என்றால் அதிக கேரட் மதிப்பை கொண்ட தங்கமாக இருக்கலாம். தங்கத்திற்கு அருகில் காந்தத்தை கொண்டு செல்லும்போது, தங்கம் நகர்ந்தால் அதில் பிற உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக இரும்பு, நிக்கல் போன்றவற்றைக் கூறலாம். இது கலப்படமான தங்கமாக இருக்கலாம்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications